ஓடும் காரில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. சிக்கிய சிறுவர்கள்.. உபியை அதிரவைத்த பகீர் சம்பவம்
ஆக்ரா: உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தலித் சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. 16 மற்றும் 17 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள், அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலை வழக்குக்கு பிறகு, வட இந்தியாவில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 13 வயது தலித் சிறுமியை, ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மொத்தம் மூன்று மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது மாணவன் தலைமறைவாகியுள்ளான். அவனை தேடி வருகிறோம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநில, மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு காரில் வந்த சிறுமிக்கு தெரிந்த உள்ளூர் சிறுவர்கள் பாட்டிலில் தண்ணீர் கொடுத்துள்ளனர். சிறுமி எதுவும் யோசிக்காமல் அதை குடித்துள்ளார்.
அதை குடித்த உடனே சிறுமிக்கு தலை சுற்றி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கான சமயம் பார்த்து காத்திருந்த சிறுவர்கள், சிறுமியை காரில் ஏற்றி காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். பிறகு அங்கு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து சிறுமியை ஒரு மேம்பாலத்தின் அருகே தள்ளி விட்டு, சிறுவர்கள் தப்பி சென்றுள்ளனர்.
மயக்கம் தெளிந்த பிறகு சிறுமி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளதால், இந்த சம்பவத்தை வீட்டில் இருப்போரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து இந்தப் பிரச்னை குறித்து சிறுமியின் தந்தை காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் போக்சோ, கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். தப்பித்த மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.
விசாரணையில் சிறுமிக்கு, தண்ணீரில் போதை மருந்து கலக்கி கொடுத்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுள்ள காவல்துறையினர், சிறுமிக்கு உளவியல் ஆலோசனை செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நீதி வாங்கித்தருவதுடன், மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications