விமானப்படை வீரரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி
டெல்லி: டெல்லியில் 17 வயது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியைச் சேர்ந்தவர் விமானப்படை வீரர் ரமேஷ் சந்திரா(40). அவருக்கும் சுதாவுக்கும்(28) கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். டெல்லி கண்டோன்மென்ட் அருகே உள்ள சுப்ரதோ பார்க்கில் விமானப்படை வீரர்களுக்கு அரசு அளித்துள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
ஆசிரியை ஆக உள்ள சுதா கடந்த மாதம் 10ம் தேதி தனது கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நெஞ்சு வலி என்று கூறியவர் மயங்கிவிட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். ரமேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுதா தனது 17 வயது கள்ளக்காதலனுடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்தது தெரிய வந்தது. போலீசார் சுதாவை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் சுதா கூறுகையில்,
2008ம் ஆண்டு திருமணம் நடந்ததில் இருந்து செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக இல்லை. ரமேஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. முதுகலைப்பட்டப்படிப்பில் முதலிடம் பிடித்த நான் என்ஜினியரிங் பயிற்சி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றினேன். அங்கு தான் விமானப்படை ஊழியரின் மகனான அந்த 17 வயது சிறுவனை சந்தித்தேன். அவன் என் மீது காதல் வயப்பட்டு அதை தெரிவித்தான் என்றார்.
ரமேஷ் தனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பது குறித்து அறிந்து அவரை கண்டித்துள்ளார். இதையடுத்து தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல சுதா முடிவு செய்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications