வான் பாதுகாப்பு.. ரேசில் முந்தும் சீனா! இந்தியாவின் பிளான் என்ன? வெளியான முக்கிய தகவல்!
டெல்லி: வான் பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்காவும், சீனாவும் ரொம்ப சீரியஸாக இறங்கியிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவின் நிலை என்ன? என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு காலத்தில் குதிரை மீது உட்கார்ந்து கொண்டு, இரவு பகலாக பயணித்து.. எதிரி நாட்டுக்கு சென்று சண்டை செய்வோம். ஆனால், இப்போது கதையே வேற! வான் வழியாக மட்டுமே போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. உதாரணம் சொல்ல வேண்டும் எனில், ஈரான்-இஸ்ரேலை பாருங்க. இப்படியாக நிலைமை தலைகீழாக மாறியிருக்கும் நிலையில், நாம் வான் பாதுகாப்புக்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

மாஸ் காட்டும் அமெரிக்கா
அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், நெடுந்தூர ஏவுகணைகளை புதியதாக தயாரித்திருக்கிறது. AIM - 260 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த வகை ஏவுகணைகள், அந்நாட்டு கடற்படையின் F/A-18F போர் விமானத்தில் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டிருக்கிறது. லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம்தான் இதை உருவாக்கியிருக்கிறது. ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பாயும் வகையில் இந்த ஏவுகணைகள் டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன.
200 தூரத்திற்குள் உள்ள இலக்குகளை ஒரு இன்ச் கூட பிசிராமல் துல்லியமாக தாக்கும். இந்த ஆண்டு அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு இது புது வரவு.
மிரட்டும் சீனா
இன்னொரு பக்கம் சீனாவும் சும்மா இல்லாமல், PL-16, PL-17, PL-21 என 3 ஏவுகணைகளை 2025ல் உருவாக்கியிருக்கிறது. மூன்று ஏவுகணைகளும் மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தம் திறன் கொண்ட ஏவுகணைகளாகும். ஆபரேஷன் சிந்தூர் தாக்குலின்போது, பாகிஸ்தான் விமானப்படை PL-15 ரக ஏவுகணைகளை கொண்டு நம்மை தாக்க முயன்றது. ஆனால் இலக்கு மிஸ் ஆனதால் தாக்குதல் வெற்றியடையவில்லை. இப்படியாக இரண்டு பெரிய நாடுகள் புதிய ஆயுதங்களை உருவாக்கி வருகின்றன.
களத்தில் இறங்கிய இந்தியா
இந்தியாவின் கதை என்ன? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இதற்கு பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன. அதாவது இந்தியா கடந்த காலங்களில் வெளிநாட்டிலிருந்து இதுபோன்ற ஏவுகணைகளை வாங்கி வந்தது. ஆனால், இப்போது உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏவுகணைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.
புது வரவு
அந்த வகையில் DRDO அஸ்த்ரா மார்க்-2 ஏவுகணையை டிசைன் செய்திருக்கிறது. 200 கி.மீக்குள் இருக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் இதன் டிசைன் இருக்கிறது. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் இந்த ஏவுகணை பயன்பாட்டுக்கு வரும் என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. சுகோய்-30, தேஜாஸ் போன்ற விமானங்களில் இதனை பயன்படுத்த முடியும். மொத்தம் 700 ஏவுகணைகள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
அஸ்த்ரா வரிசையில், அஸ்த்ரா மார்க்-3 ஏவுகணையை எதிர்காலத்தில் உருவாக்க DRDO திட்டமிட்டு வருகிறது. திட எரிபொருளுக்கு பதில் திரவ எரிபொருளை கொண்டு இயங்கும் வகையில் இதன் மோட்டார் வடிவமைக்கப்படும். இதன் ரேஞ்ச் 350 கி.மீ என பாதுகாப்பு துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
-
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
சீனாவின் பலே பிளான்! வடகொரியாவில் இறங்கிய ஜி ஜின்பிங்.. மொத்த உலகமும் திரும்பி பார்த்த தருனம்! -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வேலையை காட்டும் டிரம்ப்! ஈரான் உடனான டீலிங்கில்.. திடீர் ட்விஸ்ட்! சீரியஸாகும் பஞ்சாயத்து! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications