ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் தண்டனை உறுதி- ஜெட்லி
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் மற்றும் 2ஜி முறைகேடு வழக்குகளில் விசாரணை நியாயப்படி நடைபெறுவதாகவும், யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபாவில் இன்று தெரிவித்தார்.
இவ்விரு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அதிமுக உறுப்பினர்கள் இரு அவைகளிலும் நேற்று முதல் கோரிக்கைவிடுத்து வந்ததையடுத்து லோக்சபாவில், ஏர்செல்-மேக்சிஸ் மற்றும் 2ஜி ஊழல் விவகாரம் குறித்து விவாதம் நடைபெற்றது.

உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பதிலளித்து அருண் ஜெட்லி கூறியதாவது: 2ஜி ஊழல் வழக்கிலாகட்டும், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலாகட்டும், குற்றவாளிகள் தண்டனை பெறுவது உறுதி.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முந்தைய அரசை போல, தற்போதைய மத்திய அரசு தலையிடவில்லை. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், கடந்த ஜனவரி மாதம், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையில் உள்ளது.
பிப்ரவரி 27ம் தேதி, அதாவது 5 நாட்களுக்கு முன்பு, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக, கிடைத்த சில ஆதாரங்களையடுத்து, பல இடங்களிலும், அதுவும் குறிப்பாக, சென்னையில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ நடத்திய இந்த சோதனைகளில் பல ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு மந்தகதியில் நடைபெறுவதாக கூறும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. எப்.ஐ.ஆர் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று சில உறுப்பினர்கள் பேசினர். அமலாக்கத்துறை விசாரிக்கும் வழக்குகளில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யும் நடைமுறை கிடையாது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
2ஜி மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் ஆகிய இரு வழக்குகளுமே கோர்ட் விசாரணையில் இருப்பதால் மேலதிக தகவல்களை கூற முடியாது. அதேநேரம், இந்த வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளிகள் யாராக இருந்தாலும்.. இந்த வார்த்தையை அடிக்கோடிட்டு கொள்ளுங்கள்.., யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், சட்டப்படி தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும். இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications