அயோத்தி ராமர் கோவில் கட்ட முஸ்லிம்கள் உதவ வேண்டும்- சர்ச்சை கருத்தால் உ.பி. அமைச்சர் அதிரடி டிஸ்மிஸ்
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம்கள் முன்வர வேண்டும் என்று பேசிய உத்தரப்பிரதேசத்தின் சர்ச்சை அமைச்சர் ஒம்பால் நெக்ராவை அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கற்களை விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் கொட்டி வருகின்றனர். அத்துடன் ராமர் கோவில் கட்டுவதற்கான சிக்னல் பிரதமர் மோடியிடம் இருந்து வந்துவிட்டதாகவும் இந்துத்துவா அமைப்பினர் கூறி வருகின்றனர்.

இது நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பிஜூனூரில் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் ஒம்பால் நெக்ரா, அயோத்தியில் ராமர் கோவில், மதுராஅவில் கிருஷ்ணர் கோவிலைக் கட்டுவதற்கு அதாவது கரசேவை செய்வதற்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்களும் முன்வர வேண்டும் எனக் கூறியிருந்தார்.
நெக்ராவின் கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நெக்ராவோ தம்முடைய கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து நெக்ராவை அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக டிஸ்மிஸ் செய்துள்ளார் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications