லவ் பண்ணுவே.. ஆனா கல்யாணம் பண்ணிக்க முடியாதோ.. காதலன் மீது ஆசிட் அடித்த காதலி!
காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
அலிகார்: என்னது.. என்னை லவ் பண்ணுவே.. ஆனா கல்யாணம் மட்டும் பண்ணிக்க முடியாதோ என்று ஆவேசப்பட்ட காதலி, காதலன் மீது ஆசிட்டை ஊற்றிவிட்டார்.
உத்தர பிரதேசத்தில் அலிகார் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜீவன்கார் பகுதியில் வசித்து வருபவர் பைசாத். இவருக்கு 20 வயதாகிறது. அதேபகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண் காதலித்தார்.

6 மாத காதல் இது.. ஆனால் கடந்த சில வாரங்களாக காதலியுடன் பேசுவதை பைசாத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் இளைஞர் மீது சந்தேகப்பட்டு, நேரிலும் பைசாத்தை சந்தித்து, தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்
ஆனால், பைசாத் கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், பைசாத்தின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டார். முகத்தில் ஆசிட் பட்டு, பைசாத் துடிதுடித்தார். உடனடியாக ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு 2 கண்களும் பாதிக்கப்பட்டு விட்டது. முகமெல்லாம் மொத்தமாக சிதைந்து போய்விட்டது.
இப்போதுகூட இளைஞர் டெல்லி ஜவஹர்லால் நேரு ஆஸ்பத்திரியில்தான் பைசாத் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பைசாத்தின் தந்தை போலீசில் புகார் செய்ததையடுத்து, 326 ஏ என்ற பிரிவின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்து இளம்பெண் கைதாகி உள்ளார். இதை பற்றின விசாரணையில் 6 மாசம் காதலித்துவிட்டு, கல்யாணத்துக்கு மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் ஆத்திரப்பட்டு ஆசிட்டை ஊற்றினேன் என்று அந்த பெண் கூறியுள்ளார்.
பைசாத்தின் தாயார் ருக்ஷானா சொல்லும்போது, "அந்த பெண் என் பையனுக்கு போன் செய்துள்ளார். ஆனால், என் பையன் அந்த போனை எடுக்கவில்லை. அதனால்தான் சம்பவத்தன்று காலையில் என் பையனை சந்தித்து இது பற்றி கேட்டுள்ளார். கல்யாண பேச்சும் எடுத்துள்ளார். இதற்கு என் மகன் சம்மதிக்கவில்லை என்பதால் இந்த ஆசிட் வீச்சு நடந்துள்ளது" என்றார். கல்யாணத்துக்கு மறுத்ததால் காதலன் மீது காதலி ஆசிட் வீசப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications