மதமாற்றத் தடைச் சட்டத்தை நிறைவேற்றும் வரை மதமாற்றங்கள் தொடரும்: சுஷ்மா சுவராஜ்
போபால்: கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை நிறைவேற்றும் வரை மதமாற்றங்கள் தொடரும் என்று வெறியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா, குஜராத், கேரளா உள்ளிட்ட இடங்களில், பிற மதத்தை சேர்ந்தவர்கள் இந்து மதத்துக்கு மாறிய சம்பவங்கள் நடந்தன. இதனை ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் மேற்கொண்டன. நாடு முழுவதும் அதிர்வு அலையை ஏற்படுத்திய இந்த சம்பவங்கள், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இந்த விவகாரத்தில் மத்தியில் உள்ள பாஜ அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் முடங்கின. இதற்கிடையே, ராஜஸ்தானில் மறு மதமாற்ற நிகழ்ச்சி நடைபெறும் என விஷ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சாதனை விளக்க நிகழ்ச்சி மத்தியப் பிரதேச மாநிலம் போபா லில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :-
" கட்டாய மதமாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்டும் வரை 'கார் வாப்சி' போன்ற மதமாற்ற நிகழ்வுகள் தொடரும் என்று நாடாளுமன்றத்தில் நாங்கள் உறுதியாக கூறியுள்ளோம். சட்டம் நிறைவேற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துக்கொண்டால் இதுபோன்ற நிகழ்வுகள் தானாக நின்றுவிடும்.
மதமாற்ற தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில், இந்திய அரசியலமைப்பின் மாண்புகள் மீறப்படவில்லை. சுயமாக மதம் மாற விரும்புவர்களை இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது. சுயமாக மதம் மாற விரும்புவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிப் பெற்று மதம் மாறிக்கொள்ளலாம்' எனத் தெரிவித்தார்.
மேலும், மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சுஷ்மா, ‘மேக் இன் இந்தியா திட்டத்தினால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன் வந்துள்ளன. இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அசாம் மாநிலத்தில் நிகழ்ந்து வரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது' என்றார்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications