பாஜகவில் போட்டியிட விருப்பம்.. உடனே கொலை குற்றவாளியின் ஆயுள் தண்டனையை நிறுத்திய அலகாபாத் ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த கொலை குற்றவாளியின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் பிரமோத் குமார் நிகம். இவர் தேசிய சாலை வியாபாரிகள் சங்கத்தின் நிறுவன செயலாளராக இருந்தார்.

அதுமட்டுமின்றி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வந்த ராம் ஜென்மபூமி இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

Allahabad High Court

சுட்டுக்கொலை

பிரமோத் குமார் நிகம் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
உத்தர பிரதேசத்தில் அரசியல்வாதியாகவும், தாதாவாகவும் வலம் வந்த முக்தார் அன்சாரி (இப்போது இறந்துவிட்டார்) கும்பல் தான் அவரை கொன்றது.

கொலையின் பின்னணி

இதுதொடர்பாக சிக்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரமோத் குமார் நிகம் என்பவருக்கும் அரசியல்வாதியும், தாதாவான முக்தார் அன்சாரியின் ஆதரவாளரான நந்த்லால் ராய் என்ற பப்லு ராய் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தகராறில் , மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரமோத் குமார் நிகமிற்க நந்த்லால் ராய் மிரட்டலும் விடுத்தார்.

அதன்பிறகு அடுத்த சில மணிநேரங்களில் பிரமோத் குமார் நிகம் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்..
சேஷ்நாத் சர்மா என்பவர் தான் பிரமோத் குமார் நிகமை சுட்டு கொன்றார். இதன் பின்னணியில் நந்த்லால் ராய் இருப்பதாக கூறப்பட்டது.

நந்த்லால் ராய்க்கு ஆயுள் தண்டனை

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த வாரணாசி செசன்ஸ் நீதிமன்றம் சேஷ்நாத் சர்மா மற்றும் நந்த்லால் ராய் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இந்த தண்டனை கடந்த 2025ம் ஆண்டில் வழங்கப்பட்டது. ஆயுள் தண்டனையை தொடர்ந்து நந்த்லால் ராய் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஹைகோர்ட்டில் மனு

இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நந்த்லால் பாஜக சார்பில் அல்லது சுயேச்சை வேட்பாளராக போட்டியிட விரும்புகிறார். இதனால் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது ஆயுள் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று நந்த்லால் ராய் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ''கொலை வழக்கு தொடர்பான எஃப்ஐஆர்-ரில் எனது பெயர் சேர்க்கப்படவில்லை. 17 நாட்களுக்கு பிறகு தான் நான் இந்த கொலையில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டது. அதுவும் யூகத்தின் அடிப்படையில் தான் என்னை தொடர்புப்படுத்தி .ள்ளனர். இப்போது சட்டசபை தேர்தலில் பாஜக டிக்கெட் அல்லது சுயேச்சையாக போட்டியிட விரும்புகிறேன். இதனால் எனது தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

தண்டனையை நிறுத்தி வைத்த ஹைகோர்ட்

இந்த மனு நீதிபதிகள் சித்தார்த், வினய் குமார் திவேதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், ''சாதாரண மனிதனின் வாழ்வாதார உரிமை போன்றது தான் ஒரு அரசியல்வாதி தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமையும் உள்ளது. எனவே மேல்முறையீட்டாளருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்'' என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அதுமட்டுமின்றி நந்த்லால் ராய்-யின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

யார் இந்த நந்த்லால் ராய்?

ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நந்த்லால் ராய் முதலில் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். கடந்த 2005ம் ஆண்டில் உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ கிருஷ்ணஆனந்த் ராய் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இவரை அரசியல்வாதியும், தாதாவுமான முக்தார் அன்சாரி கும்பல் தான் செய்தது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக நந்த்லால் ராய் இருந்தார். சிபிஐ அவரிடம் விசாரணை மேற்கொண்டது.

ஆனால் முக்தார் அன்சாரி கும்பல் மிரட்டியதால் அவர் பிறழ் சாட்சியாக மாறினார். இதன்மூலம் நந்தலால் ராய் தேசிய அளவில் கவனம் பெற்றார். அதோடு பாஜக எம்எல்ஏ கிருஷ்ண ஆனந்த் ராய் கொலை வழக்கில் 2019ல் முக்தார் அன்சாரி விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு நந்த்லால் ராய் தொடர்ந்து முக்தார் அன்சாரியின் ஆதரவாளராக வலம் வந்தார். அப்போது தான் பிரமோத் குமார் நிகம் கொலை நடந்தது. அதில் நந்த்லால் ராய் சிக்கினார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோதே தாதா முக்தார்அன்சாரி கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது கும்பல் சிதைந்தது. இதில் நந்த்லால் ராய் மீண்டும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். தன்னை பாஜகவின் ஆதரவாளர் என்று அவர் நிலைநிறுத்தி 2027 சட்டசபை தேர்தலில் பாஜக டிக்கெட்டில் அவர் போட்டியிட விரும்பி பணிகளை செய்து வந்தார். ஆனால் அதற்குள் பிரமோத் குமார் நிகம் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+