தமிழகத்தில் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல்? முதல்வர் விஜய் போட்ட திட்டம்! ஏப்ரலில் தேர்தல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிகாரிகளுடன் விவாதித் திருக்கிறார் முதல்வர் விஜய். அனேகமாக, ஏப்ரல் மாதம் இந்த தேர்தலை நடத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.

தமிழகத்தில் அண்மைக்காலத்தில் 1996, 2001, 2006, 2011 ஆகிய வருடங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடந்தன. 2016 -ல் உள்ளாட்சி தேர்தல் நடத்த அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார். ஆனால், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இருந்ததால், குறிப்பிட்ட காலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. இதனால் 2016 அக்டோபரில் உள்ளாட்சி அமைப்புகள் தனி அதிகாரிகளின் நிர்வாகத்துக்குள் சென்றது.

Tamil Nadu Local Body Elections

அதேசமயம், ஜெயலலிதாவின் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டதால், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் அதிமுகவும் ஆர்வம் காட்டவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி, கிராமப்புற உள்ளாட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளா ட்சிகள் என இரண்டாக பிரித்தார். அதில் கிராம புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தினார் எடப்பாடி பழனிச்சாமி.

2021-ல் அவரது ஆட்சி முடிந்து திமுக அரசு பதவியேற்றதை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலை நடத்தினார் அன்றைக்கு முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின். இதனால் தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு வெவ்வேறு காலக்கட்டங்களாக இருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம், திமுக ஆட்சியின் போது முடிந்து விட்டது. அந்த பதவிகளுக்கு தேர்தல் நடத்தாமல் சிறப்பு அதிகாரி களை நியமித்து கிராம பஞ்சாயத்து களின் நிர்வாகத்தை கவனித்து வந்தது அப்போதைய திமுக அரசு.

இந்த நிலையில், தற்போது 9 மாவட்டங்களின் ஊராட்சிகளில் இருந்த மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் நேற்றோடு முடிந்து விட்டது. அந்த வகையில், தமிழகத்தில் தற்போது கிராம உள்ளாட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் யாரும் பதவியில் இல்லை. கிராம உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் மட்டுமே இனி மக்கள் பிரதி நிதிகள் பதவிக்கு வர முடியும். அதுவரையில், ஊராட்சிகளில் உள்ள அரசு அலுவலர்கள் தான் நிர்வாகத்தை கவனித்துக் கொள்வார்கள்.

அதேபோல, மாநாகராட்சி மற்றும் நகராட்சிகளை உள்ளடக்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளில் பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் வருகிற பிப்ரவரியோடு முடிகிறது. அதன் பிறகு, அவை களுக்கும் தேர்தல் நடத்தினால் மட்டுமே மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் கோலோச்ச முடியும்.

இப்படிப்பட்ட சூழலில், வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர் கள் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை முன்னெடுக்குமாறு தமிழக தேர்தல் தலைமை அதிகாரிக்கு, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தது. இதனையடுத்து, கடந்த ஒரு வாரமாக இதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள் தமிழக தேர்தல் அதிகாரிகள்.

பொதுத்தேர்தல்களாக இருந்தாலும் சரி, உள்ளாட்சித் தேர்தல்களாக இருந்தாலும் சரி... வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் தான் இருக்கிறது. வாக்காளர் பட்டியல்களை உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையம் தயாரிக்க முடியாது.

இந்த சூழலில், கிராம உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து, முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு அவரது செயலாளர்கள் கொண்டு சென்ற போது, இது குறித்து கடந்த வாரம் ஒரு ஆலோசணை நடந்திருக்கிறது. அப்போது, கிராம உள்ளாட்சிகளின் பதவி காலம் முடிந்தது எப்போது? 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சிகளின் பதவி காலம் முடிவது எப்போது? நகர்ப்புற உள்ளாட்சிகளின் பதவிகாலம் எப்போது முடிகிறது? இவைகளின் பின்னணிகள் என்ன? என்பது குறித்தெல்லாம் விவரித்திருக்கிறார்கள் அதிகாரிகள். இதனை உள்வாங்கிக்கொண்ட முதல்வர் விஜய், பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சிகளின் பதவி காலம் முடிவதால், அதன் பிறகு அனைத்து உள்ளாட்சிகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தினால் என்ன? என்று கேட்டுள்ளார். இதன் சாதக-பாதகங்கங்களை அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொத்தேர்வுகள் முடிந்ததும் ஏப்ரல் மாதம் இறுதியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று முதல்வர் விஜய்க்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாம்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+