ஹரியானா வன்முறை.. நூ மாவட்ட எஸ்பி இடமாற்றம்.. பாய்ந்த அதிரடி நடவடிக்கை! சாட்டையை சுழற்றிய மாநில அரசு
சண்டிகர்: ஹரியானாவில் ஏற்பட்ட வன்முறையின் காரணமாக நூ மாவட்ட எஸ்பி வருண் சிங்லா மீது அதிரடியாக மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை பணியிடமாற்றம் செய்துள்ள மாநில அரசுக்கு புதிதாக அந்த மாவட்டத்துக்கு ‛எக்ஸ்பர்ட்' ஒருவரை நியமனம் செய்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். இந்நிலையில் தான் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது.

இந்த ஊர்வலத்தின்போது கல் வீசி தாக்கினர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் ஒருவரையொரும் தாக்கிக்கொண்டனர். இந்த மோதல் வன்முறையாக மாறியது. வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த வன்முறையில் மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பிற மாவட்டங்களில் வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்னறர். அதன்படி நூ, பரிதாபாத், பல்வால் உள்பட 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்டு 5 வரை இணைய சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன.
மேலும் பதற்றமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. வன்மறை தொடர்பாக மொத்தம் 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நூ மற்றும் குர்கிராம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க வன்முறை நடக்கும் நூ மாவட்ட எஸ்பியின் மீது மாநில உள்துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நூ மாவட்ட எஸ்பியாக உள்ள வருண் சிங்லா அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் நூ மாவட்டத்தில் இருந்து பீவானி மாவட்டத்துக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக நூ மாவட்ட எஸ்பியாக நரேந்திர பீஜார்னியா நூ மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இந்த மாவட்ட எஸ்பியாக பணியாற்றி அனுபவம் கொண்டவர். மேலும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் புரிந்து வைத்துள்ள நபராக இருக்கிறார். இதனால் தான் நூ மாவட்டத்தில் வன்முறை தொடங்கிய நிலையில் நரேந்திர பீஜார்னியாவுக்கு நூ மாவட்டம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு இருந்தது. இத்தகைய சூழலில் அவர் தற்போது நூ மாவட்டத்தின் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications