எல்லையில் நுழைந்த மியான்மர் ராணுவம்.. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு.. என்ன நடக்கிறது
டெல்லி: மியான்மார் எல்லையில் இருந்து ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இந்த விவகாரத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
மியான்மர் நாட்டில் இப்போது ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அந்த ராணுவ ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சிப் படைகளுக்கும் போராடி வருகிறது. இதனால் அங்கே ஒரு வித பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே அங்கே எல்லையில் உள்ள ராணுவப் படைகள் முகாம்களைக் கிளர்ச்சி படைகள் பிடித்துவிட்டனர். இதனால் மியான்மர் நாட்டில் உள்ள உள்ள ராணுவ வீரர்கள் திடீரென இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மிசோரம்: அண்டை நாட்டு ராணுவ வீரர்கள் மிசோரம் நாட்டில் வந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து மிசோரம் அரசு இது குறித்து உடனடியாக மத்திய அரசை அலர்ட் செய்துள்ளது. அண்டை நாட்டு வீரர்கள் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவதை உறுதி செய்யுமாறு மிசோரம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மியான்மரில் நடந்து வரும் மோதலால் சுமார் 600 வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து மிசோரம் முதல்வர் லால்துஹோமா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அவசர ஆலோசனையையும் நடத்தினர். இதற்கிடையே எப்படி வங்கதேசத்துடனான எல்லை வேலியிட்டு காக்கப்படுகிறதோ அதேபோல மியான்மர் எல்லையிலும் வேளி அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
முடிவுக்கு வரும்: இதற்கு முன்பு வரை இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே வசிக்கும் மக்கள் விசா இல்லாமல் 16 கிமீ தூரம் வரை பரஸ்பர எல்லைக்குள் செல்ல அனுமதிக்கும் முறை இருந்தது. அது விரைவில் முடிவுக்கு வருவது இதன் மூலம் தெரிய வருகிறது.
கவுஹாத்தியில் இது குறித்து பேசிய அமித் ஷா, "வங்கதேச எல்லையைப் போல் மியான்மர் உடனான இந்தியாவின் எல்லை விரைவில் பாதுகாக்கப்படும்.. வங்கதேசம் உடனான எல்லையை எப்படி வேலி அமைத்தது இப்போது பாதுகாத்து வருகிறோமோ அதுபோல மியான்மர்- இந்திய எல்லையிலும் வேலி அமைக்க நரேந்திர மோடி அரசு முடிவு செய்துள்ளது. மியான்மர் எல்லையில் வசிக்கும் மக்கள் கட்டுப்பாடு இல்லாமல் இந்தியா வரலாம் என்ற உடன்படிக்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது, இந்தியாவுக்குள் சுதந்திரமான வருவது முடிவுக்கு வரும்" என்றார்.
எல்லை மாநிலங்கள்: மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மியான்மருடன் 1,643 கிமீ நீள எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடு இல்லாமல் எல்லையைக் கடக்கலாம் என்ற உடன்பாடு கடந்த 2018 இல் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமித் ஷா தனது உரையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியைத் தாக்கி விமர்சித்துப் பேசினார். முந்தைய ஆட்சியில் பொதுமக்கள் அரசு வேலை பெற கூட லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது என்றும், பாஜக ஆட்சியில் வேலைக்காக ஒரு பைசா கூட கொடுக்க வேண்டியதில்லை என்றும் கூறினார்.
ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், அது குறித்துப் பேசிய அமித் ஷா, 550 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் வீடு திரும்புவதாகத் தெரிவித்தார். இது நமது ஒட்டுமொத்த நாடும் பெருமைப்பட வேண்டிய ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications