பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம்.. இது மோடி கியாரண்டி.. பீகாரில் அமித் ஷா பேச்சு!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பிரதமர் மோடி 3வது முறை பிரதமர் ஆனதும், பசுவதை செய்பவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டமாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பீகாரில் இந்த மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

Amit shah says that the people who slaughter cows will be hanged upside down

பீகாரில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் மகாகத்பந்தன் கூட்டணியும் போட்டியிடுகின்றன. மகாகத்பந்தன் அணியில் ராஷ்டிரீய ஜனதா தளம் 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 9 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிபிஐ எம்.எல் கட்சி 3 தொகுதிகளும், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 19 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. அடுத்த 3 கட்ட வாக்குப்பதிவில் 21 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பீகார் மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

இன்று பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமித் ஷா, "காங்கிரஸ் போல வாக்கு வங்கியைக் கண்டு பாஜக பயப்படுவதில்லை. பிரதமர் மோடி அயோத்தியில் ராம் லல்லா கோயிலைக் கட்டியுள்ளார். இப்போது சீதா தேவி பிறந்த இடத்தில் ஒரு பெரிய கோவில் கட்டுவதுதான் மிச்சம் உள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும், "ராமர் கோவில் திறப்பு விழாவில் கூட பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தவர்களால் இதைச் செய்ய முடியாது. சீதையின் வாழ்க்கையைப் போல் யாரேனும் ஒரு கோவிலை கட்ட முடியும் என்றால் அது நரேந்திர மோடி மட்டும் தான், அது பாஜக தான்." என்று பேசியுள்ளார் அமித் ஷா.

மேலும் பேசிய அமித் ஷா, "இன்று லாலு பிரசாத் யாதவ், அதிகார அரசியலுக்காக, தன் மகனை முதல்வராக்க, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார்" என்று விமர்சித்துள்ளார்.

மேலும் மதுபானி பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "மதுபானி பகுதியில் பசு வதை வழக்குகள் அதிக அளவில் பதிவாகி உள்ளன. மதுபானி அன்னை சீதையின் பூமி. இந்த பகுதியில் பசு வதையை ஏற்க முடியாது. பாஜக அரசு பசு வதை அல்லது பசு கடத்தலை ஒருபோதும் அனுமதிக்காது.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராகப் பதவியேற்றவுடன், பசுக்களை வெட்டுபவர்கள் தலைகீழாக தொங்க விடப்படுவார்கள் என்பது மோடியின் உத்தரவாதம்" என்று ஆவேசமாகப் பேசியுள்ளார் அமித் ஷா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+