அம்மா… ஏ அக்கா… ஏ அண்ணா... நாடாளுமன்றத்தில் தூள் பறக்கும் உறவு முறை அழைப்புகள்!
டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய விவாதம் ஒன்றில் ஒருவரை ஒருவர் தெலுங்கில் அம்மா, அக்கா, அண்ணா என்று பாசத்துடன் அழைத்து ருசிகர விவாதம் நடத்தினார்கள்.
பஞ்சாபில் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரத்தை எதிர்த்ததால் கீழே தள்ளப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் இறந்த சிறுமியை பற்றி நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் நடந்தது.

அதில் பேசிய காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி நான் பேசுவதை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கேட்கவில்லை என கூறினார். இதற்கு பதிலளித்த நாயுடு நீங்கள் பேசுவதை நான் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன் "அம்மா" என்று கூறினார். உடனே ரேணுகா நான் அம்மா இல்லை, அக்கா என்று சொன்னார்.
இதற்கு பதில் அளித்த நாயுடு "யார் மீதாவது அன்பும், பாசமும் வைத்தியிருந்தால் அவர்களை நாங்கள் அம்மா என்று பாசத்துடன் அழைப்போம். நான் எனது பேத்தியை அம்மா என்று தான் கூப்பிடுவேன்" என விளக்கம் அளித்தார்.
அப்போது இந்த விவாதத்தில் கலந்துகொண்டிருந்த சி.பி.எம் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி நாயுடுவை பார்த்து "அண்ணா நாங்கள் பேசுவதையும் கொஞ்சம் கேளுங்கள்" என்று கூறியதும் அவையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.

நாடாளுமன்றத்தில் எப்போதும் மாறி மாறி குற்றம் சாட்டிய படி சண்டையிட்டுக்கொண்டிருக்கும் உறுப்பினர்கள் வழக்கத்துக்கு மாறாக அம்மா, அக்கா, அண்ணா என பாசத்துடன் அழைத்துக்கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications