ரெசார்ட்டையே விழுங்கிய பனிச்சரிவு.. காஷ்மீரை தாக்கிய அழகிய ‛அவலாஞ்சி' வீடியோ! செம வைரல்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் சோன்மார்க் சுற்றுலா தலத்தில் நேற்று இரவில் திடீரென்று ‛அவலாஞ்சி' ஏற்பட்டது. திடீரென்று ஏற்பட்ட இந்த பனிச்சரிவின் காரணமாக பனிக்கட்டிகள் பேரலை போல் எழுந்து வந்து ரெசார்ட்டையே மூழ்கடித்தது. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள நிலையில் அந்த வீடியோ வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர்.. நம் நாட்டில் உள்ள பனி பிரதேசங்களில் ஒன்றாக உள்ளது. இந்த ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் கடைசியில் இருந்து பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் பனிப்பொழிவு ஜம்மு காஷ்மீரில் அதிகரித்துள்ளது.
இந்த குளு குளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க பலரும் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா செல்கின்றனர். ஜம்மு காஷ்மீரில் கந்தர்பால் மாவட்டத்தில் சோன்மார்க் என்ற இடம் உள்ளது. இது சுற்றுலா தலமாகும்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக பனிக்காலத்தில் இந்த சுற்றுலா தலத்துக்கு அதிகளவில் மக்கள் படையெடுப்பார்கள். அந்த வகையில் நேற்றும் அதிகமான மக்கள் அந்த இடத்துக்கு சென்றனர்.இந்நிலையில் தான் நேற்று இரவு சுமார் 10.12 மணிக்கு திடீரென்று ‛அவலாஞ்சி' ஏற்பட்டது. அவலாஞ்சி என்பது பனிச்சரிவாகும்.
சோன்மார்க் பகுதியில் உள்ள மலை உச்சியில் இருந்து திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவு அங்கு வரிசையாக இருந்த ரெசார்ட்டுகளை முற்றிலுமாக மறைத்து மூடியது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ, சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது உயரமான மலைச்சரிவில் இருந்து திடீரென்று பனிக்கட்டிகள் சரிந்து தாழ்வான இடத்தை நோக்கி பேரலை போல் வருவது தான் ‛அவலாஞ்சி'யாகும். பார்க்க அழகாக இருந்தாலும் கூட இது பேரழிவை தரக்கூடியது. கட்டடங்களை சிதைத்து உயிர் பலி வாங்க கூடியது. மேலும் பனிச்சரிவு இடத்தில் ஒருவர் இருந்தால் அவருக்கு மரணம் ஏற்படுவது உறுதி.
#Avalanche reported from #Sonamarg in #Kashmir around 10:13pm.
— Weatherman Navdeep Dahiya (@navdeepdahiya55) January 27, 2026
Praying for everyone's safety. pic.twitter.com/Xi2lyWyG0d
ஆனால் அதிர்ஷ்டவசமாக நேற்றைய பனிச்சரிவில் சேதம், உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுபற்றி சோன்மார்க் பியோபார் மண்டலத் தலைவர் ஃபுர்கான் ஷேரா கூறுகையில், ‛‛பனிச்சரிவு லாரிகள் நிறுத்துமிடத்தைத் தாக்கியது. அதேபோல் பனிச்சரிவு சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் கட்டடங்களை பனிச்சரிவு முழுமையாக மூடியது தெரியவந்துள்ளது. ஏற்கனவே, நேற்று (அதாவது நேற்று முன்தினம்) முன்தினமே பனிச்சரிவு தொடர்பாக எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் விடுத்து இருந்தது'' என்றார்.
கடந்த 24 மணிநேரத்தில் சோன்மார்க் உட்பட அதனை சுற்றிய பல இடங்களில் மிதமானது முதல் அதிக பனிப்பொழிவு பதிவாகி உள்ளது.தொடர்ச்சியான பனிப்பொழிவு காரணமாக சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தின் ஓடுதளம் பனியால் மூடப்பட்டுள்ளது. இதனால் நேற்றைய தினம் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. அதன்படி ஸ்ரீநகருக்குள் வரும் 29 விமானங்களும், ஸ்ரீநகரில் இருந்து வெளியே செல்லும் 29 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
அதேபோல் கடும் பனிப்பொழிவால் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை காசிகுண்ட்-பனிஹால் மூடப்பட்டுள்ளது. மேலும் பனிஹால்-புட்காம் இடையே சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, தண்டவாளங்களை சீரமைக்கும் பணியை முடித்து மீண்டும் சேவை தொடங்கப்பட்டது.
ஸ்ரீநகர் உட்பட பள்ளத்தாக்கில் மிதமான பனிப்பொழிவு பதிவானாலும், உயரமான சுற்றுலாத் தலங்களான சோன்மார்க், குல்மார்க், பஹல்காம் போன்றவை கடும் பனியால் பாதிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்காக மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறைகளும், உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications