குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஆனந்திபென் படேல் பஞ்சாப் ஆளுநராகிறார்?
டெல்லி: குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் ஆனந்தி பென் படேல். இதையடுத்து அவரை பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது துணைப் பிரதமராகப் பதவி வகித்த அத்வானியைத்தான் 2014-இல் நடந்த லோக்சபா தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், அயோத்தி வழக்கின் நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமல் நரேந்திர மோடியை அப்பதவிக்கு முன்னிறுத்தியது பா.ஜ.க.

இதையடுத்து பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அதன் பின்னர் அமைச்சரவையில் 75வயதை தாண்டிய அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சாந்த குமார் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில், குஜராத் மாநில முதல்வர் பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அண்மைக் காலமாக 75 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பதவியில் இருந்து தானாக முன்வந்து விலகும் மரபு பாரதீய ஜனதாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் மாதம் 75 வயது பிறந்த கொண்டாடவுள்ளேன். அதனையொட்டி முதல்வர் பொறுப்பில் இருந்து விடுவித்து கொள்ள விரும்புகிறேன்.
இரு மாதங்களுக்கு முன்பு என்னை விடுவிக்குமாறு கட்சிக்கு நான் கடிதம் எழுதினேன். துடிப்பான குஜராத், சட்டமன்ற தேர்தல் போன்றவை நடைபெறவுள்ளதால் புதிய முதல்வர் பணியாற்றுவதற்கு உரிய கால அவகாசம் வேண்டும் என்பதால் இரு மாதங்களுக்கு முன்பே என்னை விடுவிக்குமாறு கட்சிக்கு நான் கடிதம் எழுதினேன்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக குஜராத்தில் தலித்களுக்கு எதிராக வன்முறை நீடிப்பதாக தேசிய அளவில் சர்ச்சை எழுந்தது. இதனால், ஆனந்திபென் படேல் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அரசியல் விமர்சர்களால் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கிடையே பஞ்சாப் மாநில ஆளுநராக ஆனந்திபென் படேல் நியமிக்கப்படவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications