பாஜக, காங்., ‛ஜீரோ’.. ஜெகன்மோகனுக்கு ஷாக்! ஆந்திரா லோக்சபா தேர்தலில் முந்தும் சந்திரபாபு நாயுடு
அமராவதி: ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் அங்கு யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த பரபரப்பான கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என கூறப்பட்டுள்ள நிலையில் ஆளும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் பின்னடைவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார். இந்நிலையில் தான் சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சந்திரபாபு நாயுடுவை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ஜெகன்மோகன் ரெட்டி கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது ஆந்திரா அரசியலில் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2 கட்சிகள் தவிர ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா, காங்கிரஸ், பாஜக கட்சிகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தற்போது அனைத்து கட்சிகளும் பணிகளை தொடங்கி விட்டன. ஆந்திராவை பொறுத்தமட்டில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக கட்சிகள் தனித்து போட்டியிடும் சூழல் தற்போது நிலவி வருகிறது. மாறாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
இதற்கிடையே தான் ஆந்திராவில் இன்றைய தினம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் யார் வெல்வார்கள்? என்று Democracy Times Network சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த முடிவு என்பது பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆளும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு கடும் அதிர்ச்சியை வழங்கி உள்ளது.
அதாவது இந்த கருத்து கணிப்பின் முடிவின்படி ஆந்திராவில் மொத்தம் 25 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி தான் அதிக இடங்களை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி 46 சதவீத ஓட்டுகள் பெற்று 14 தொகுதிகளை பின்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மாறாக ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடசிக்கு 44 சதவீத ஓட்டுகள் பெற்று 11 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் எனவும், மற்றவர்கள் 10 சதவீத ஓட்டுகளை பெற்றாலும் கூட எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆந்திராவில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என இந்த கருத்து கணிப்பின் முடிவில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications