விசாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 2 பயங்கரங்கள்.. 2 குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொடூரமாக படுகொலை
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அதே விசாகப்பட்டினத்தில் நகர்புற பகுதியில் இன்னொரு குடும்ப தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக விசாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பெண்டுர்த்தி மண்டலம் ஜுத்தடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அப்பலராஜு என்பவர் குடும்ப தகராறில் இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அந்த ஊர் கிராம மக்களின் கூற்றுப்படி, நள்ளிரவில் இரு குடும்பத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சண்டை தான் ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்பட காரணமாக இருந்தது என்றார்கள்.

விசாரணை
இந்தக் கொலைகளுக்கு சொத்து தகராறே முதன்மைக் காரணம் என்று போலீசார் நம்புகின்றனர், மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்த பின்னர் மேலும் முக்கிய விவரங்கள் வெளிவரும் என்று கூறினார். இதற்கிடையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் விஜயசாய் ரெட்டி இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு, விரிவான விசாரணையை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

4 பேர் கொலை
இந்த சம்பத்திற்கு மத்தியில் விசாகப்பட்டினத்தின் மதுரவாடா நகரில் ஆதித்யா பார்ச்சூன் டவர்ஸ் குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டனர். தாய், தந்தை மற்றும் சகோதாரனை கொன்றுவிட்டு மூத்த மகன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொலை செய்து தற்கொலை
விசாகப்பட்டினத்தின் மதுரவாடா நகரில் ஆதித்யா பார்ச்சூன் டவர்ஸ் குடியிருப்பில் என்.ஆர்.ஐ குடும்பம் ஐந்தாவது மாடியில் வசித்து வந்தது. தாய், தந்தை மற்றும் இளைய மகன் ஆகியோர் குடும்பத்தின் மூத்த மகனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. குடும்ப தகராறில் மூத்த மகன் தனது பெற்றோரையும் சகோதரனையும் கொலை செய்துவிட்டு தீக்குளித்து இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

அதிர்ச்சியில் விசாகப்பட்டினம்
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்தை அடைந்தனர். இந்த சம்பவம் குறித்த முழு விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை. ஒரே நாளில் இந்த இரண்டு சம்பவங்களில் மொத்தம் 10 பேர் விசாகப்பட்டினத்தில் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications