‛கணவருக்கு 3வது திருமணம்’.. பெண் தேடி பேனரடித்து நடத்திய 2 மனைவிகள்! காரணத்தை கேட்டா அசந்துபோவீங்க
அமராவதி: ஆந்திராவில் கணவரின் ஆசையை நிறைவேற்ற 2 மனைவிகள் சேர்ந்து அவருக்கு பெண் பார்த்து 3வது திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் கணவரின் திருமணத்துக்கு பத்திரிகை, பேனர் அடித்து 2 மனைவிகள் வாழ்த்து தெரிவித்து முன்நின்று நடத்தி வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி கணவரின் இந்த 3வது திருமணத்தை 2 மனைவிகள் முன்னின்றி நடத்தியதற்கான காரணம் என்பது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
திருமணம்.. இன்றும் பல பெண்களுக்கும், கனவாகவே இருந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. பொருளாதார சூழல், படிப்பு உள்பட பல காரணங்களால் பல பெண்களுக்கும், ஆண்களுக்கும் திருமணம் என்பது தள்ளிப்போய் வருகிறது.

குறிப்பாக சமூக வலைதளங்களை திறந்தாலே போதும் 90s கிட்ஸ்களின் ஆண்களுக்கு பெண் கிடைக்காமல் இருப்பதாக பல மீம்ஸ்கள் உலா வருவதை நம்மால் பார்க்க முடியும். இப்படி முதல் திருமணமே பலருக்கும் குதிரை கொம்பாக உள்ள நிலையில் தான் ஆந்திராவில் ஒருவருக்கு அவரது 2 மனைவிகள் முன்நின்று இளம்பெண்ணை 3வதாக திருமணம் செய்துவைத்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், முற்றிலும் இது உண்மை. இந்த சம்பவம் எங்கு நடந்தது? கணவருக்கு அவரது 2 மனைவிகள் ஏன் முன்நின்று இளம்பெண்ணை பார்த்து 3வது திருமணம் செய்து வைத்தனர்? என்பது பற்றிய தகவல் பின்வருமாறு: ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் பெடபயலு அருகே உள்ள கின்சூரு பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டண்ணா.
இவருக்கு கடந்த 2000ல் திருமணம் ஆனது. அப்போது அவர் சாகேனி பர்வதம்மா என்பவரை கரம் பிடித்தார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ தொடங்கினர். ஆனாலும் கூட இந்த தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதையடுது்து பாண்டண்ணா 2வது திருமணம் செய்ய முடிவு செய்தார். இதுபற்றி மனைவி சாகேனி பர்வதம்மாவிடம் தெரிவித்தார். அவரும் கணவரின் 2வது திருமண ஆசையை நிறைவேற்ற ஓகே சொன்னார்.
இதைத்தொடர்ந்து முதல் மனைவி சாகேனி பர்வதம்மாவின் சம்மதத்துடன் பாண்டண்ணா, சாகேனி அப்பளம்மா என்பவரை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்தார். பாண்டண்ணா - சாகேனி அப்பளம்மா தம்பதிக்கு கடந்த 2007 ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது பண்டண்ணா - சகேனி அப்பளம்ம்மா தம்பதியின் மகனுக்கு 17 வயது ஆகிறது. தற்போது பாண்டண்ணா, தனது முதல் மனைவி சாகேனி பர்வதம்மா, 2வது மனைவி சாகேனி அப்பளம்மா மற்றும் மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தான் பாண்டண்ணாவுக்கு இன்னொரு குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால் முதல் மனைவி சாகேனி பர்வதம்மா, சகோனி அப்பளம்மாவால் குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை. இதையடுத்து பாண்டண்ணா 2வது குழந்தை பெற்றெடுக்க 3வது திருமணம் செய்ய முடிவு செய்தார். இதுபற்றி அவர் முதல் மனைவி சாகேனி பர்வதம்மா மற்றும் 2வது மனைவி சாகேனி அப்பளம்மா ஆகியோரிடம் தெரிவித்தார்.
பொதுவாக இப்படி எந்த கணவராவது கூறினால் அவருடைய மனைவி கொதித்தெழுந்துவிடுவார். ஆனால் பாண்டண்ணாவின் மனைவிகள் 2 பேரும் அப்படி எதுவும் செய்யவில்லை. மாறாக பாண்டண்ணாவின் விருப்பத்தை கேட்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்ததோடு கணவரின் 3வது திருமண ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்தனர்.
அதுமட்டுமின்றி தங்களின் கணவர் பாண்டண்ணாவுக்கு பெண் பார்க்கும் படலத்தை அவர்கள் தொடங்கினர். இதையடுத்து உள்ளூரிலேயே வசிக்கும் இளம்பெண்ணை, பாண்டண்ணாவுக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் பேசி முடித்தனர். அதன்பிறகு பாண்டண்ணா மற்றும் அந்த இளம்பெண்ணின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிக்க மனைவிகள் சாகேனி பர்வதம்மா மற்றும் சாகேனி அப்பளம்மா ஆகியோர் தடபுடலாக ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
அவர்கள் 2 பேரும் கணவரின் 3வது திருமணத்துக்கு பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கினர். அதுமட்டுமின்றி பேனரடித்து திருமண விழாவுக்கு வருவோரை வரவேற்றனர். இதையடுத்து இரு மனைவிகளின் முன்னிலையில் பாண்டண்ணா, இளம்பெண்ணை 3வது திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் கடந்த மாதம் 25ம் தேதி நடந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் தற்போது வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
2வது குழந்தை பெற்றெடுக்க கணவர் விரும்பியதை தொடர்ந்து அவருக்கு 2 மனைவிகள் சேர்ந்து இளம்பெண்ணை 3வதாக திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications