ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு - இன்று விசாரணை!
டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளது. இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
ஜல்லிகட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது. இதனால் தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற நிலை இருந்தது.

மேலும் ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இருப்பினும் அந்த அறிவிக்கையிலும் கரடி, புலி, சிங்கங்களைப் போல விலங்குகள் பட்டியலிலேயே காளையும் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே மத்திய அரசின் இந்த அறிவிக்கைக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் அனுமதிக்கு எதிராக மொத்தம் 6 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள் தலைமை நீதிபதி தாக்குர் தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது இம்மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த வழக்கில் முடிவெடுக்கும் போது தமிழக அரசை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கேவியட் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய விசாரணையின் போது ஜல்லிக்கட்டுக்கான அனுமதி தொடருமா? தடை விதிக்கப்படுமா என்பது தெரியவரும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications