அண்ணாமலை Vs ஆர்.எஸ். பாரதி: "பாஜக பகையாளி, ஒன்றும் செய்ய முடியாது"- தீவிரமாகும் கருத்து மோதல்கள்
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை திமுகவையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்பாகவும் விமர்சித்து கருத்து வெளியிடுவதும் அவருக்கு எதிராக திமுக எம்.பி ஆர்.எஸ். பாரதி எதிர்வினையாற்றி பேசி வருவதும் தொடர்கதையாகியுள்ளன.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் சென்றபோது கோடிக்கணக்கில் பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறியிருந்தார்.
அதற்கு திமுக சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அண்ணாமலையிடம் ரூ. 100 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறப்பட்டது.
திமுகவின் நோட்டீஸ் எச்சரிக்கை பதில்
இந்த நிலையில், சென்னையில் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, எனக்கு ஊரில் ஆடு, மாடுகள் தான் உள்ளன. ரூ.610 கோடி அல்ல. முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள். அடுத்த 6 மணி நேரம் கட்சி அலுவலகத்தில் தான் இருப்பேன். முடிந்தால் கைது செய்யுங்கள்.
என்னை கைது செய்யாவிட்டால் நீங்கள் தான் மக்களிடம் மாட்டிக்கொள்வீர்கள். தொட்டாம்பட்டியில் இருந்து வந்த என்னை தொட்டுப்பார்க்கட்டும் என்று கூறியிருந்தார்.
அவர் தெரிவித்தபடியே சென்னை பாஜக அலுவலகத்தில் மாலை வரை காத்திருந்த அண்ணாமலை பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில், அண்ணாமலையின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் டெல்லியில் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலை தொடர்பாக விரிவாக பேசினார். அதன் விவரம்:
"இங்கு இருந்து பணம் போயிருந்தது என்றால், மத்திய அரசிடம் தானே எல்லா அதிகாரமும் உள்ளது. தவறு நடந்தது என்றால் நீங்களே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கலாம். முதல்வர் வெளிநாடு செல்லாமல் தடுக்கும் அனைத்து அதிகாரமும் மத்திய அரசிடம் உள்ளதே.
https://twitter.com/BJP4TamilNadu/status/1508760958713274370
பணம் கொண்டு போக முடியுமா?
சாதாரண குடிமகன் கூட வெளிநாடு செல்வதாக இருந்தால் விசா வாங்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளதே. ஒரு முதல்வர் இவ்வளவு பணம் கொண்டு போகிறார், அவர் உடன் இருப்பவர்கள் பணம் கொண்டு போகிறார்கள் என்று சொல்வார்களேயானால் மத்திய அரசு சும்மா விட்டிருக்குமா? யாரை ஏமாற்றப் பார்க்கிறார் அண்ணாமலை?
மத்தியில் உள்ள பாஜக தலைவர்கள் அண்ணாமலை மீது அதிருப்தியில் இருப்பதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அவர் பொறுப்பில்லாமல் பேசுகிறார். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உள்ள சுமூக உறவை இவர் கெடுத்து விடுவாரோ என்ற எண்ணத்தை இவரது செயல் ஏற்படுத்துவதாக மத்திய அரசில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்.
எனவே, விரைவில் அண்ணாமலை பதவி காலியாகும் என நினைக்கிறேன். அவரை (இடத்தை விட்டு) காலி பண்ணுவதற்காகவே அங்குள்ளவர்கள் திட்டமிட்டு அவரை இப்படியெல்லாம் பேச வைக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.
- கே.வி பள்ளிகளில் கட்டாய சமஸ்கிருதத்தை எதிர்க்கும் திமுக - பாஜக என்ன சொல்கிறது?
- "நான் திராவிடத்தை நிராகரிக்கவில்லை; திராவிடம் பிளஸ் வேண்டுமென்கிறேன்" - அண்ணாமலை பேட்டி
முதிர்ச்சியற்றவர் அண்ணாமலை
அண்ணாமலை முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்பதை திரும்பத் திரும்ப நிரூபித்து வருகிறார். நான் எழுப்பிய கேள்விகளில் எதற்கும் அவர் நேரடியாக பதில் தராமல் எதை, எதையோ பேசுகிறார்.
விமான நிலையத்தில் முதல்வரின் மருமகன் அவரை வரவேற்றார் என்று பேசுகிறார். இதுவா அரசியல்? குடும்பம் என இருந்தால் அவர்கள் வெளிநாடு போகக் கூடாதா?
திமுகவில் அண்ணாதுரை சொன்னது போல, ஆக்கபூர்வ விமர்சனங்களை, குற்றச்சாட்டுகளை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
திமுக, அதிமுக என இருப்பதை திமுக, பாஜக இடையிலான போட்டி போல உருவாக்க அண்ணாமலை நினைக்கிறார். அதற்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் கிடையாது.
அதிமுகவை பொறுத்தவரை எங்களுக்கு அவர்கள் பங்காளி, இவர்கள் (பாஜக) பகையாளி. இவர்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். பாரதி கூறினார்.
இதுபோன்ற சர்ச்சை கருத்துகளை வெளியிடுவதால் அண்ணாமலை மீது கைது நடவடிக்கை பாயுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எதற்கு அவரை கைது செய்து சிறையில் சாப்பாடு போட்டு பணத்தை விரயம் செய்ய வேண்டும் என்று மறுகேள்வி எழுப்பினார் ஆர்.எஸ். பாரதி.
"விருப்பத்தின் பேரில் முதல்வருடன் சென்றோம்"
விமர்சனங்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், பொறுப்புள்ள கட்சியில் இருப்பவர்கள் பேசினால் நாங்கள் பதில் கொடுக்கத்தான் செய்வோம். அவதூறு வழக்கில் இதுவரை யாராவது கைது செய்யப்பட்டுள்ளார்களா? இது கூடவா அவருக்கு தெரியாது. அவர் காவல்துறை அதிகாரியாகத்தானே பணியாற்றியவர். இந்திய தண்டனை சட்டம் 500ஆம் பிரிவின் கீழ் யாராவது கைது செய்யப்பட்டிருக்கிறார்களா?
முதல்வருடைய வெளிநாட்டு பயணத்தின்போது ஆடிட்டர் சண்முகராஜை ஏன் அழைத்துச் சென்றார்கள் என்று பாஜகவின் வி.பி. துரைசாமி கேட்டுள்ளாரே என்று நிருபர்கள் சொன்னதற்கு, "அவர் சென்றதாக யார் சொன்னார்கள்? யார், யார் முதல்வருடைய அதிகாரபூர்வ பயணத்தில் இடம்பெற்றிருந்தனர் என்பதற்கான பட்டியலே உள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிகாரிகள் போன்றோர்தான் சென்றனர். நான் கூடத்தான் சென்றேன். டி.ஆர்.பி. ராஜா கூடத்தான் சென்றார். அப்துல்லா சென்றார். நாங்களெல்லாம் தனிப்பட்ட விருப்பத்தின்பேரில் சென்றோம். தலைவர் வருகிறார்கள் என்பதால், அபுதாபி போன்ற இடங்களில் அவரை வரவேற்க நாங்கள் சென்றோம். திமுகவுக்கு அபுதாபியில் கட்சிக் கிளையே உள்ளது" என்றார் ஆர்.எஸ். பாரதி.
அண்ணாமலையின் பதில் என்ன?
இந்த நிலையில், ஆர்.எஸ். பாரதியின் கருத்துக்கு என்ன சொல்கிறீர்கள் என்று அண்ணாமலையிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"நான் அதிமுகவை மிரட்டிப் பணம் பறித்ததாக குற்றம்சாட்டியது திமுகதான். அதனால்தான் ஆதாரம் இருந்தால் கைது செய்யுங்கள் என்று கூறினேன். உண்மை என்றால் சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்தானே. அதை விட்டு, விட்டு வேறு எதையோ பேசி திதை திருப்புகிறார்கள். இவர்கள் தவறு செய்தால் யாருமே பேசக்கூடாது அல்லது கேட்கக் கூடாது என நினைக்கிறார்கள். அப்படியெல்லாம் இவர்களை விட்டு விட மாட்டேன்," என்றார் அண்ணாமலை.
https://www.youtube.com/watch?v=1dGzBWY_tNs&t=50s
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?














Click it and Unblock the Notifications