மின் உற்பத்தியில் தன்னிறைவு.. இலக்கை நோக்கி வேகமாக முன்னேறும் உ.பி! யோகி கொடுத்த மாஸ் அப்டேட்
லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு புதியதாக 1,600 மெகாவாட் மின் உற்பத்தி அலகு ஒன்றை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் மாநிலத்தின் மின் தேவை பூர்த்தி செய்யப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய புதியதாக 1,600 மெகாவாட் மின் உற்பத்தி அலகு ஒன்று தொடங்கப்பட இருப்பதாக அறிவித்திருக்கிறார். நேற்று நடைபெற்ற மாநகராட்சி வாரியக் கூட்டத்தில் இந்த முன்மொழிவுக்கு யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதேபோல இதற்கான முன்மொழிவு விரைவில் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என கூறியுள்ளார்.
இது குறித்து உத்தரப் பிரதேச மின் கழகம் மற்றும் உத்தரப் பிரதேச ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் ஆகியவற்றின் தலைவர் டாக்டர் ஆஷிஷ் கோயல் கூறுகையில், "இந்த புதிய அலகின் கட்டுமானத்திற்கான செலவு சுமார் 18,624 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மேஜா உர்ஜா நிகம் லிமிடெட்டின் துணை நிறுவனமாக NTPC மற்றும் புரொடக்ஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் கீழ் நிறுவப்படும். இதுவரை, 2,630 மெகாவாட் திறன் கொண்ட அன்பரா-ஏ, அன்பரா-பி மற்றும் அன்பரா-டி அலகுகள் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக புதியதாக 1,600 மெகாவாட் மின் உற்பத்தி அலகு நிறுவப்படுகிறது. இது மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யும். இதேபோல மேலும் சில திட்டங்கள் தொடங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் உத்தரப் பிரதேசம் மின் உபரி மாநிலமாக உருவெடுக்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications