விபத்தை தடுக்கும் தொழில்நுட்பம்.. ரூ.1000 கோடியில் ஒரு பைசா கூட செலவிடாத தென்கிழக்கு ரயில்வே.. ஷாக்
புவனேஷ்வர்: ரயில்கள் மோதிக்கொள்வதை தடுக்கும் பாதுகாப்பு அமைப்பான ஆண்டி கொலிஷன் சிஸ்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.943 கோடியில் ஒரு பைசா கூட கடந்த மூன்று ஆண்டுகளில் தென்கிழக்கு ரயில்வே செலவு செய்யாதது அம்பலத்திற்கு வந்துள்ளது.
மேற்கு வங்காளம் மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படு வருகிறது. இந்த ரயில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஒடிசாவின் பாலோசார் மாவட்டம் பஹாநகா ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. அதே நேரத்தில் பெங்களூர் - ஹவ்ரா ரயிலும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது.

சில வினாடிகளில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதிக்கொண்டதால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது. இந்த ரயில் விபத்தில் 278 பேர் பலியாகினர். ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்தியா மட்டும் இன்றி சர்வதேச அளவில் இந்த ரயில் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பெரும் சோகத்தை இந்த ரயில் விபத்து ஏற்படுத்தியுள்ளது.
ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தற்போது மறு சீரமைப்பு பணிகள் முடிந்து ரயில்கள் வழக்கம் போல் தொடங்கிவிட்டது. ஆனாலும் இந்த விபத்து ஏற்படுத்திய தாக்கம் மக்கள் மனதில் இருந்து துளி கூட அகலவில்லை. அதிலும் ரயில் விபத்துக்கு சொல்லப்படும் சில காரணங்களும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. ரயில்வே அதிகாரப்பூர்வமாக விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும், பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனித தவறு காரணமா? என பல்வேறு கோணங்களிலும் ரயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கிரீன் சிக்னல் கிடைத்ததால் லோகோ பைலட் சரக்கு ரயில் நின்ற வழித்தடத்தில் ரயிலை இயக்கியதாக சொல்லப்படுகிறது. மின்னனு இண்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த விபத்து நடந்து இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்வணவ் தெரிவித்தார்.
இந்த விபத்துக்கு ஏதேனும் நாச வேலை காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் ரயில்வே தரப்பில் எழுந்ததால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரயில் மோதுவதை தடுப்பதற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய கவச் தொழில் நுட்பம் இந்த வழித்தடத்தில் இல்லாதது விபத்துக்கு காரணமாக அமைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
அதிலும், ரயில்வே நிர்வாகும் பயணிகள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பல விஷயங்களில் சமரசம் செய்து இருப்பதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருக்கிறது. குறிப்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பே சிக்னல் அமைப்பில் குளறுபடிகள் இருப்பதாக சுட்டிக்காட்டி தென்மேற்கு ரயில்வே தலைமை செயல்பாட்டு மேலாளர் இந்திய ரயில்வேக்கு கடிதம் எழுதியதாகவும் இது குறித்து ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், ரயில்கள் மோதிக்கொள்வதை தடுக்கும் பாதுகாப்பு அமைப்பான ஆண்டி கொலிஷன் சிஸ்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.943 கோடியில் ஒரு பைசா கூட கடந்த மூன்று ஆண்டுகளில் தென்கிழக்கு ரயில்வே செலவு செய்யாதது அம்பலத்திற்கு வந்துள்ளது. தென்கிழக்கு ரயில்வேயின் செலவீன கணக்கு புத்தங்களில் உள்ள தரவுகள் மூலம் முன் சொன்ன தகவல் தெரியவந்துள்ளது.
ஒடிசா ரயில் விபத்து நடைபெற்ற இடம் இந்த தென்கிழக்கு ரயில்வே மண்டலத்திற்குள் தான் வருவதும் கவனிக்கத்தக்கது. பயணிகள் பாதுகாப்பு விவகாரத்தில் ரயில்வே அலட்சியம் காட்டும் வகையில் நடந்து கொண்டதையே இது காட்டுவதாக பயணிகள் தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications