இத்தாலி பறந்தார் மிஸ் அனுஷ்கா... திரும்பி வரும் போது மிஸஸ் கோஹ்லியாக வருவாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும், அனுஷ்கா ஷர்மாவும் தங்களது குடும்பத்தினருடன் இத்தாலிக்கு பறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இத்தாலி பறந்தார் மிஸ் அனுஷ்கா... திரும்பி வரும் போது மிஸஸ் கோஹ்லியாக வருவாரா?- வீடியோ

    மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் அடுத்த வாரத்தில் இத்தாலியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இருவரும் குடும்பம் சகிதமாக இத்தாலி பறந்துள்ளனர்.

    இந்தியாவின் பேவரிட் செலப்ரிட்டி ஜோடிகள் என்றால் அதில் முதலிடம் பிடிப்பது விராட் கோஹ்லியும் அனுஷ்கா ஷர்மாவும் தான். இருவரும் சில ஆண்டுகளாகவே டேட்டிங் செய்து வருவதாக மீடியாக்களில் பரவலாக செய்திகள் வலம் வந்தன. அண்மையில் இருவரும் இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்திருந்ததிலும் லவ் கெமிஸ்ட்ரி கொப்பளித்திருந்தது.

    இந்நிலையில் அனுஷ்கா ஷர்மாவும், விராட் கோஹ்லியும் இத்தாலியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக டுவிட்டரில் ஒரு தகவல் பரவியது. டிசம்பர் 10 மற்றும் 12 தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இவர்களின் திருமணம் இத்தாலியில் நடைபெற உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து மும்பையில் இந்த மாதக் கடைசியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் உலவின.

    திருமணம் குறித்து அனுஷ்கா மறுப்பு

    திருமணம் குறித்து அனுஷ்கா மறுப்பு

    ஆனால் இந்த தகவலை அனுஷ்கா ஷர்மா மறுத்திருந்தார். விடுமுறை கொண்டாட்டத்திற்காகவே இத்தாலி செல்வதாகவும் அவர் கூறி இருந்தார். ஆனால் அனுஷ்காவின் பதிலால் அவரது ரசிகர்கள் யாரும் சமாதானம் அடையவில்லை.

    குடும்பத்துடன் இத்தாலி பயணம்

    குடும்பத்துடன் இத்தாலி பயணம்

    இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு இத்தாலி புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் அனுஷ்காவின் தந்தை அஜய்குமார், தாயார் அஷிமா மற்றும் சகோதரர் கர்னேஷ் உள்ளிட்டோர் இத்தாலிக்கு சென்றுள்ளனர்.

    மாறு வேடத்தில்

    மாறு வேடத்தில்

    இதே போன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி டெல்லியில் இருந்து இத்தாலி புறப்பட்டு சென்றுள்ளார். நேற்று இரவு 11.30 மணியளவில் விமான நிலையம் வந்த அவர் முகத்தை மறைத்துக் கொண்டு மக்கள் யாரும் தன்னை எளிதில் அடையாளம் காணமுடியாத வகையில் வந்திருந்தாராம். அதிகாலை 2.45 மணியளவில் அவர் விமானம் மூலம் இத்தாலி பறந்துள்ளார்.

    மிலனில் நண்பர்களுக்கு டிக்கெட்

    இதே போன்று விராட் கோஹ்லியின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு ஏற்கனவே இத்தாலியின் மிலன் சிட்டியில் டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இவை அனைத்துமே திருமணத்திற்கான ஏற்பாடுகள் என்றும், அநேகமாக அடுத்த வாரத்தில் அவர்களது திருமணம் நடைபெறலாம் என்றும் சொல்லப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+