வெறும் 24 மணி நேரம்தான்.. நாடே குலுங்கி நிற்குது.. அடுத்தடுத்த 6 சம்பவங்கள்.. கேட்கவே சிலிர்க்குதே
கொல்கத்தா: கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்த சம்பவத்தின் சூடு ஆறும் முன் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து பல்வேறு பலாத்கார சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 33 வயதான சஞ்சோய் ராய் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராயின் கடந்தகால நடத்தை, முந்தைய திருமண வாழ்க்கையில் மனைவியை கொடுமை செய்தது மற்றும் ஆபாச வீடியோக்கள் பார்த்தது ஆகியவை அவருக்கு மனநல ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள்.

இவர் அங்கே தன்னார்வலராக போலீஸார் உடன் இணைந்து செயல்பட்டு உள்ளார். இவர் வெறும் தன்னார்வலர்தான். ஆனால் போலீஸ் குழுக்களில் இருக்கிறார், அங்கே கிடைத்த காண்டாக்ட் மூலம் போலீஸ் கமிட்டி ஒன்றிலும் கூட கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.
கிழிந்த புளூடூத் இயர்போன் உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். இவர் அந்த புளூடூத் ஹெட் செட் உடன் அங்கே சுற்றியதை பலரும் பார்த்து உள்ளனர். இதன் மூலமே அவர் சிக்கி உள்ளார். மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடனான தொடர்பு காரணமாக ராய் பல்வேறு மருத்துவமனை துறைகளுக்கு சென்று பல்வேறு பணிகளை செய்துள்ளார். இது போன்ற ஒரு வாய்ப்பிற்காக அவர் இத்தனை காலம் காத்து இருந்ததாக கூறப்படுகிறது.
வாக்குமூலம்: கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற நபர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதோடு அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.
சிபிஐயிடம் அவர் தந்த வாக்குமூலத்தில், நான் மட்டும்தான் குற்றத்தை தனியாக செய்தேன். நான்தான் குற்றவாளி. நான் செய்ததை சரி என்றெல்லாம் சொல்ல மாட்டேன். நான்தான் தவறு செய்தேன்.. என்னை தூக்கில் போடுங்கள். என்னை தூக்கில் போட்டாலும் தவறுன்னு சொல்ல மாட்டேன். எனக்கு பிரச்சனை இல்லை, என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்த சம்பவத்தின் சூடு ஆறும் முன் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து பல்வேறு பலாத்கார சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
சம்பவம் 1: பெங்களூருவில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் பார்ட்டியில் இருந்து வீடு திரும்பிய போது பலாத்காரம் செய்யப்பட்டார். பைக்கில் லிப்ட் கேட்டு அந்த பெண் சென்றுள்ளார்.. இந்த நிலையில் இரவு 12 மணிக்கு பைக் ஓட்டிய அந்த நபரால் பலாத்காரம் செய்யப்பட்டார். லிப்ட் கேட்டு அந்த பெண் சென்ற நிலையில்.. அந்த பெண்ணை தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்..
சம்பவம் 2: மனநிலை சரியில்லாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 35 வயது இளைஞர் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் நபர் 25 வயது நிரம்பிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உணவில் மயக்க மருந்து கலந்து அவரை பலாத்காரம் செய்துள்ளார். போலீசார் இவரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் 3: உத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுமி ஒரு வருடத்திற்கும் மேலாக அவரது தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சிறுமியின் தாயார் தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த ஓராண்டாக தனது கணவர் தங்களது மகளை பலமுறை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார். அவர் தனது கணவரை எதிர்கொண்டபோது, அவர் அவருக்கு முத்தலாக் கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார் என்றும் கூறி உள்ளார்.
சம்பவம் 4: டேராடூனில் இருந்து பஞ்சாப் செல்ல முயன்ற மைனர் பெண் பேருந்தில் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். டிரைவர்கள், கண்டக்டர் உட்பட 5 பேர் இதில் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் 5: உத்தரபிரதேசத்தின் சோன்பத்ராவில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 14 வயது சிறுமி, வாரணாசியில் பலியானார். சத்தீஸ்கரில் உள்ள தனது உறவினர்களின் வீட்டிற்கு அனுப்பப்பட்ட பாதிக்கப்பட்ட பெண், ஒரு வருட சிகிச்சைக்கு பின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மரணம் அடைந்தார்.
சம்பவம் 6: மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் டீன் ஏஜ் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 69 வயது முதியவரை போலீஸார் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். .பியோஹாரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications