மழைக்காலக் கூட்டத்தொடரை உண்டு, இல்லையென பண்ணப்போகும் எதிர்கட்சிகள்..அருண் ஜெட்லி கவலை..

Subscribe to Oneindia Tamil

டெல்லி : லலித் மோடி விவகாரம், ஸ்மிருதி இராணி கல்வித் தகுதி உள்ளிட்ட விவகாரங்களை முன் வைத்து, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சீர்குலைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21-ம் தேதி தொடங்குகிறது. இத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் அருண் ஜேட்லி கூறியதாவது..

arunjaitly

தற்போது கூட உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஐ.பி.எல். ஊழல் புகாரில் சிக்கியுள்ள லலித் மோடி, போர்ச்சுகல் செல்வதற்கு பயண ஆவணம் பெற, சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உதவிய விவகாரத்தை எழுப்பி அவையில் பெரும் அமளி ஏற்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மேலும், ஜி.எஸ்.டி. மசோதா, நிலம் கையகப்படுத்துதல் சட்டம் போன்றவை நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அவற்றிற்கு முட்டுக்கட்டை போடுவதன் மூலம் வளர்ச்சிக்கு எதிராக எந்த எதிர்க்கட்சிகளும் செயல்படாது என்பது உறுதி.

இவ்வாறு அருண்ஜெட்லீ கூறினார்.

லலித் மோடி தனது டிவிட்டர் பதிவில், ஜெட்லி உள்பட பல அரசியல் தலைவர்கள் பெயர்களை பதிவிட்டுள்ளது குறித்த ஒரு கேள்விக்கு நேரடியாக பதில் தெரிவிக்க ஜெட்லீ மறுத்துவிட்டார்.

சிலரது கருத்துகள் தொலைக்காட்சி விவாதத்துக்கு மட்டுமே சரியானதாக இருக்குமே தவிர அரசை நிர்வகிக்க பொருந்தாது என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+