குஜராத்தில் வரலாறு காணாத வளர்ச்சி.. அருண் ஜேட்லி
டெல்லி: குஜராத்தில் வரலாறு காணாத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவேதான் பாஜகவுக்கு அங்கு மக்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
அடுத்த மாதம் மாநில தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் தற்போது அந்த ஊடகங்களின் கருத்து கணிப்புகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பில் பாஜக மீண்டும் பெரும் வெற்றியைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜேட்லி டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சியால் எப்போதும் குஜராத்தில் வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் கட்சி குஜராத்தில் ஜாதி அரசியலை நடத்தி வருகிறது. ராகுல் காந்தி ஒரு தோற்றுப்போன தலைவர்.
குஜராத் மாநிலம் வரலாறு காணாத வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. குஜராத் மாடல் கண்டிப்பாக பாஜகவிற்கு மீண்டும் வெற்றியை தேடித்தரும். பாஜக கட்சியில்தான் முழுமையான மத நல்லிணக்கம் நிலவுகிறது என்றார் ஜேட்லி
குஜராத் சட்டசபை தேர்தலுக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ந் தேதி ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும். டிசம்பர் 18-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications