மணிஷ் சிசோடியாவை துணை முதல்வராக்குகிறார் கேஜ்ரிவால்! சோம்நாத் பார்திக்கு இடமில்லை?
டெல்லி: டெல்லி ஆம் ஆத்மி அரசில் முன்னாள் பத்திரிகையாளர் மணிஷ் சிசோடியாவை துணை முதல்வராக்க அரவிந்த் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் நாளை மறுநாள் பதவியேற்கிறார். தமது அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் அதிகம் வாய்ப்பளிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் டெல்லி முதல்வராக கேஜ்ரிவால் பதவியேற்றார். அவருடன் 6 அமைச்சர்கள் பதவியேற்றனர். லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதால் 49 நாள் ஆட்சிக்குப் பின் 2014 பிப்ரவரி 14-ந் தேதி கேஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அதே பிப்ரவரி 14-ந் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். இம்முறை துணை முதல்வராக முன்னாள் பத்திரிகையாளர் மணிஷ் சிசோடியாவை அரவிந்த் கேஜ்ரிவால் நியமிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
அதே நேரத்தில் முந்தைய கேஜ்ரிவால் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த சோம்நாத் பார்திக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படுகிறது. அவரது நிர்வாக செயல்பாட்டில் கேஜ்ரிவாலுக்கு அதிருப்தி இருக்கிறதாம்..
கேஜ்ரிவால் அமைச்சரவையில் கபில் மிஸ்ரா, ஜிதேந்திர தோமர், சந்தீப் குமார், ஆசிம் அகமது கான், ராக்கி பிதலான் ஆகியோர் இடம்பெறக் கூடும் என்கின்றன ஆம் ஆத்மி வட்டாரங்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications