மோடியுடன் சேர்ந்து யோகா செய்ய காலையிலேயே மேட்டுடன் ராஜ்பாத் வந்த கெஜ்ரிவால்
டெல்லி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
சர்வதேச யோகா தினமான இன்று டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதவேறுபாடு இன்றி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பலவகை ஆசனங்களை செய்தனர்.

மோடி முன்னின்று நிகழ்ச்சியை நடத்தி வைத்து யோகாசனங்களை செய்தார். இந்த நிகழ்ச்சியில் தினமும் யோகா செய்யும் பழக்கம் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு யோகா செய்தார். அவர் அதிகாலையிலேயே யோகா மேட்டுடன் ராஜ்பாத் வந்துவிட்டார்.
இது குறித்து கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

யோகா ஒரு நல்ல விஷயம். அனைவரும் யோகா செய்ய வேண்டும். யோகா செய்வதால் மன அழுத்தம் குறையும் என்றார்.
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்து முடித்த கையோடு கெஜ்ரிவால் விபாசனா தியானம் செய்தார். அதன் பிறகு முதல்வர் ஆனவுடன் அவர் பெங்களூர் சென்று யோகா உள்ளிட்டவை அடங்கிய நாச்சுரோபதி வகுப்புகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications