நிதி ஆயோக் துணைத் தலைவராக பொருளாதார வல்லுநர் அரவிந்த் பானாகரியா நியமனம்!
டெல்லி: திட்டக் குழுவுக்கு மாற்றாக மத்திய அரசு அமைத்துள்ள நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியரும் தாராள வர்த்தகப் பொருளாதார வல்லுநருமான அரவிந்த் பானாகரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக கடந்த 1950ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி மத்திய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டக் குழுவின் தலைவராக பிரதமர் இருந்தார்.

இந்நிலையில் மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு அமைந்த பிறகு, மத்திய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய குழு அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதுதொடர்பான அறிவிப்பை கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது மோடி வெளியிட்டார். இதன்படி கடந்த 1-ந் தேதி திட்டக் குழுவுக்குப் பதிலாக நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தக் குழுவின் துணைத் தலைவராக பொருளாதார வல்லுநர் அரவிந்த் பானாகரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பொருளாதார வல்லுநர் விவேக் தேவ்ராய், முன்னாள் டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே. சரஸ்வத் ஆகியோர் முழுநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுரேஷ் பிரபு, ராதா மோகன் சிங் ஆகியோர் அலுவல் சாராத உறுப்பினர்களாகவும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி, தாவர்சந்த் கெலாட் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications