முன்னாள் தடகள வீராங்கனை அஸ்வினி நாச்சப்பாவின் டெபிட் கார்டுகளை திருடி ரூ.2.7 லட்சம் எடுத்த நபர்

பெங்களூர் ஜெயநகரில் உள்ள மைதானத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தடகள வீராங்கனையான அஸ்வினி நாச்சப்பா கலந்து கொண்டார். அவர் தனது கைப்பையை மேடையில் உள்ள நாற்காலியில் வைத்து விட்டு கொடியேற்ற சென்றுள்ளார்.
அப்போது டிப்டாப்பாக உடை அணிந்த ஒருவர் மேடைக்கு வந்து அஸ்வினியின் கைப்பையில் இருந்த பர்ஸை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அந்த பர்ஸில் டெபிட் கார்டுகள் இருந்துள்ளன. அந்த நபர் கார்டுகளை திருடிய அரை மணிநேரத்தில் ஜெயநகரில் உள்ள பல்வேறு ஏடிஎம் மையங்களில் ரூ.2.7 லட்சம் பணத்தை எடுத்துள்ளார்.
அந்த நபர் பணம் எடுத்தபோது அஸ்வினியின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது.
இது குறித்து அஸ்வினியின் கணவர் தத்தா கரும்பையா கூறுகையில்,
அந்த நபர் அஸ்வினியின் இரண்டு வங்கிகளின் டெபிட் கார்டுகளை திருடி அதன் மூலம் ரூ.2.7 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். அந்த நபர் ஜெயநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வெவ்வேறு வங்கிகளின் 20 ஏ.டி.எம். மையங்களில் பணத்தை எடுத்துள்ளார். ஒவ்வொரு முறையும் ரூ.10,000 பணத்தை எடுத்துள்ளார் என்றார்.
இந்த சம்பவம் பற்றி அஸ்வினி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications