ராஜ்தானி ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம்: டிக்கெட் பரிசோதகர் மீது ரயில்வே போலீசில் புகார்
கவுகாத்தி: ராஜஸ்தானி ரயிலில் பெண் பயணியிடம் பாலியல் குறும்பு செய்ததாக அந்த ரயிலின் டிக்கெட் பரிசோதகர் மீது பாதிக்கப் பட்ட பெண்ணின் கணவர் புகார் தெரிவித்துள்ளார்.
திருமணமான 32 வயது பெண் ஒருவர் ராஜ்தானி எக்ஸ்பிரஸில் கவுகாத்தியிலிருந்து கான்பூர் செல்வதற்காக பயணம் செய்துள்ளார். அவரிடம் ஓடும் ரயிலில் பாரத் சந்திரா பாசு என்ற டிக்கெட் பரிசோதகர் தகாத வார்த்தைகள் கூறி, பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
உடனடியாக பாதிக்கப்பட்டப் பெண் தொலைபேசி மூலம் தனது கணவரைத் தொடர்பு கொண்டு டிக்கெட் பரிசோதரின் தகாத நடவடிக்கையை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது கணவர் சம்பந்தப் பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது அருகிலிருந்த ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் நியூ ஜால்பைகுரி ஸ்டேஷனில் நிறுத்தப் பட்ட ரயிலில் ரயில்வே போலீசார் சம்பந்தப் பட்ட டிக்கெட் பரிசோதகரைத் தேடியுள்ளனர். ஆனால், அதற்குள் அந்த டிக்கெட் பரிசோதகர் தலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications