மும்பை ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலி
மும்பை: எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. கூட்டத்தில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
தொடர் விடுமுறையால் மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் நேற்று முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது.

இதனால் பீதியடைந்த மக்கள் அங்கும் இங்குமாக முண்டியடித்துக்கொண்டு ஓடினர். மக்கள் ஓட்டத்தால் ரயில் நிலைய மேம்பாலத்தில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி 22 பேர் பலியாகியுள்ளனர். மேலும் அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் கூட்டத்தில் சிக்கி எராளமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் மும்பை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் 100 ரயில் சேவையை தொடங்கி வைக்க மும்பை சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications