நோயாளிகள் நெற்றியில் “நிலநடுக்கம்” ஸ்டிக்கர் – பீகார் மருத்துவமனையின் சேட்டை!
தர்பங்கா: பீகார் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் மீது "நிலநடுக்கம்" என்ற ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்தது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் காயமடைந்து தர்பங்கா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களின் நெற்றியில் "நிலநடுக்கம்" என்று ஸ்டிக்கர்கள் ஒட்டி தனி வார்டில் அனுமதிக்கப்பட்டதாக உள்ளூர் தொலைக்காட்சியில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து அந்த மாவட்டத்தில் நிலநடுக்க நிவாரணப் பணிக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் பாய்தியநாத் சாஹ்னி, தர்பங்கா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது, நோயாளிகளின் உடலில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டிருந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட அமைச்சர், விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
மருத்துவமனை அதிகாரிகளின் இந்த செயலுக்கு பா.ஜ.கவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடந்த சம்பவத்திற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications