காலில் காயம்.. ரூ.9.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிட்சேல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விலகல்
Recommended Video

கொல்கத்தா: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் இருந்து காயத்தால் வெளியேறுகிறார்.
உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் மிட்சேல் ஸ்டார்க். இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவர்.

இந்த நிலையில், ஜோகனஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில், மிட்சேல் ஸ்டார்க் காயமடைந்தார். அவருக்கு பதில் சாட் சயர்ஸ் என்ற வீரர் ஆஸி. அணியில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து உடனடியாக மிட்சேல் ஸ்டார்க் தாயகம் திரும்பியுள்ளார். ஆஸி. கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், வலது காலில் ஏற்பட்ட காயத்தால், மிட்சேல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா திரும்பிவிட்டதாகவும், அவரால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா அணி, மிட்சேல் ஸ்டார்கை ரூ.9.4 கோடிக்கு, ஜனவரியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் வாங்கியிருந்தது. அவரை மிகவும் நம்பிக்கொண்டிருந்தது அந்த அணி. சர்வதே போட்டிகளில் ஆட வேண்டும் என்பதற்காக கடந்த வருடம் ஐபிஎல் தொடரிலும், பாதத்தில் ஏற்பட்ட காயத்தால் 2016லும் மிட்சேல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. தொடர்ச்சியாக 3வது ஆண்டாக மிட்சேல் ஸ்டார்க் ஐபிஎல் ஆட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications