ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் இணைந்த முன்னணி தமிழ் எழுத்தாளர்.. 2015 சர்ச்சை ஞாபகம் இருக்கா?

பிரபல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் இணைந்தார்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர் : காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியரும், எழுத்தாளருமான பெருமாள் முருகன் இணைந்தார். ராகுல் காந்தியின் யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெறுகிறது.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் அன்றாடம் பிரபலங்கள் யாராவது இணைவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்தவகையில் நேற்று எழுத்தாளர் பெருமாள் முருகன் இணைந்துள்ளார்.

ராகுல் காந்தியின் யாத்திரை வரும் 30ஆம் தேஹி ஸ்ரீநகரில் நிறைவடைகிறது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை பல மாநிலங்கள் வழியாக நடைபயணம் சென்று ஸ்ரீநகரில் நிறைவடைகிறது.

ராகுல் யாத்திரை

ராகுல் யாத்திரை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். அதனைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா என 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் வரும் 30ஆம் தேதி ஸ்ரீநகரில் நிறைவடைகிறது.

உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் மாநிலங்களைச் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கலந்துகொண்டு ஆதரவு அளித்தனர்.

நிறைவு

நிறைவு

ராகுல் காந்தி இதுவரை சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். வரும் ஜனவரி 30ஆம் தேதி அன்று ராகுலின் ஒற்றுமை பாதயாத்திரை நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவை காங்கிரஸ் கட்சியினர் பிரம்மாண்டமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். இந்த நிறைவு விழாவில் ராகுல் காந்தி தேசியக்கொடி ஏற்றிச் சிறப்புரையாற்ற உள்ளார்.

கட்சிகளுக்கு அழைப்பு

கட்சிகளுக்கு அழைப்பு

நிறைவு விழாவின்போது, அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் கொடியேற்றுவார்கள். மேலும் இந்த நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பாஜகவுக்கு எதிராகச் செயல்பட்டு கட்சிகளான திமுக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி என 23 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராகுல் யாத்திரையில் தமிழ் எழுத்தாளர்

ராகுல் யாத்திரையில் தமிழ் எழுத்தாளர்

இந்நிலையில், நேற்று ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியரும், எழுத்தாளருமான பெருமாள் முருகனும் இணைந்தார். அதேபோல, நடிகையும், அரசியல் கட்சித் தலைவருமான ஊர்மிளா மடோன்கரும் ஜம்முவில் நடைபெறும் காங்கிரஸ் யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இணைந்தார்.

பெருமாள் முருகன்

பெருமாள் முருகன்

எழுத்தாளர் பெருமாள் முருகன் காங்கிரஸ் யாத்திரையில் இணைந்தது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "இந்திய ஒற்றுமை பயணத்தில், தமிழ்நாடின் முன்னணி எழுத்தாளரான திரு பெருமாள் முருகன் இணைந்தார். 2015 இல் தனது எழுத்துக்களுக்காக வலதுசாரி குழுக்களிடமிருந்து, அவர் எதிர்கொண்ட வெறுப்பு மற்றும் துன்புறுத்தலை எதிர்கொண்ட அவர், அமைதி மற்றும் ஒற்றுமைக்காக இந்தப் பயணத்தில் இணைய முன்வந்துள்ளார்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் - எழுத்தாளர்

பேராசிரியர் - எழுத்தாளர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் பெருமாள் முருகன், அரசு கல்லூரி ஒன்றின் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். 11 நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ள பெருமாள் முருகன், கொங்கு வட்டாரச் சொல்லகராதியைத் தொகுத்துள்ளார். விளக்கு விருது, கனடா இலக்கியத் தோட்ட விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார் எழுத்தாளர் முருகன். இவரது ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சர்ச்சை

சர்ச்சை

பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவல் பெரும் சர்ச்சைகளை ஏபடுத்தியது. மாதொருபாகன் நாவலில் இவர் எழுதியது, திருச்செங்கோடு பகுதி மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகப் பல்வேறு தரப்பினரும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து 2015ல் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, எழுத்துலகில் இருந்தே விலகுவதாக அறிவித்தார் பெருமாள் முருகன். பின்னர் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து, இலக்கியப் பிரதிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது கருத்துரிமைக்கு எதிரானது என்றும் பெருமாள்முருகன் மீண்டும் எழுத வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+