குலை நடுங்குதே.. மணிப்பூரில் மதம் கடந்த மனிதம்! விரட்டிய மெய்திகள் -பழங்குடி பெண்ணை காத்த டிரைவர்
இம்பால்: மணிப்பூரில் மெய்தி இன வெறியர்களால் பாலியல் பலாத்காரம் செய்து கடத்தி வைக்கப்பட்டு இருந்த பெண், முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநரின் உதவியால் அங்கிருந்து தப்பி வந்ததாக தெரிவித்து இருக்கிறார்.
மணிப்பூரின் மெய்தி இனவாத கும்பலான அரம்பார் தென்கோல் குழுவால் இம்பாலை சேர்ந்த குக்கி பழங்குடி இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் கடத்தி செல்லப்படுகிறார். அவரை கொடூரமாக தாக்கிய அந்த கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து ஒரு இடத்தில் அடைத்து வைத்து இருக்கிறது. 12 மணி நேரத்துக்கும் மேலாக கயிற்றால் கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர் அடையாளம் தெரியாத ஒரு மறைவிடத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்.

பல மணி நேரம் மயக்க நிலையில் இருந்த அந்த இளம் பெண் திடீரென விழித்து பார்த்தபோது, அவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததையும், கைகள் கட்டப்பட்டு அடைக்கப்பட்டு இருப்பதையும் அறிகிறார். அவர் தப்பிச் செல்லாமல் இருக்க காவலுக்காக மெய்தி இனவாத கும்பலை சேர்ந்தவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
அதில் ஒருவரை அழைத்து கழிவறை செல்ல வேண்டும் என்று கூறி கயிற்றை அவிழ்க்குமாறு தெரிவித்து இருக்கிறார். முதலில் மறுத்த அவர் பின்னர் கயிற்றை அவிழ்த்து விட்டு உள்ளார். உடனே கழிவறைக்கு சென்ற பெண், அடைத்து வைக்கப்பட்ட கட்டிடத்திற்கு பின்புறமாக தப்பிச் சென்றார். அங்கிருந்த சிறிய மலைக்குன்றில் இருந்து உருண்டு மெயின் ரோட்டுக்கு வந்துள்ளார்.
படுகாயங்களுடன் சாலையில் நின்றுகொண்டிருந்த அவர், அங்கிருந்து எப்படியாவது வேறு இடத்துக்கு செல்ல வேண்டும் என்று வாகனத்துக்காக காத்திருந்தபோதுதான் ஒரு ஆட்டோ வந்தது. அதிகாலை நேரம் அது. காய்கறிகளை ஏற்றி வந்த அந்த ஆட்டோ உயிருக்கு போராடும் அப்பெண்ணுக்கு ஆபத்பாந்தவனாக தெரிந்தது.
ஆனாலும் ஒரு வித அச்ச உணர்வு. அந்த ஆட்டோ ஓட்டுநரும் மெய்தியாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று அஞ்சி அதை நிறுத்த தயங்கியுள்ளார். பின்னர் வேறு வழி இல்லை என்று ரிஸ்க் எடுக்க முயன்ற அவர் ஆட்டோவில் லிஃப்ட் கேட்க, ஆட்டோ நின்றது. அதன் பின்னர்தான் ஆட்டோவை ஓட்டி வந்தது ஒரு இஸ்லாமியர் என்பது அவருக்கு தெரியவந்தது. நிலைமையை உணர்ந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் காய்கறிக்குள் அந்த பெண்ணை மறைத்துக்கொண்டு பிஸ்னுபூர் காவல் நிலையம் நோக்கி சென்றுள்ளார்.

அந்த பெண்ணை விரட்டியபடி மெய்தி இன கும்பல் காரில் வந்துள்ளது. காவல் நிலையத்தில் 3 போலீசாரிடம் மெய்தி கும்பல் தன்னை விரட்டி வருவதாக பெண் தெரிவிக்கவே, போலீசார் அவர்களின் வாகனத்தை நிறுத்தி பார்த்து சாதாரண ஆட்கள்தான் என்று கூறியுள்ளனர். மறுநாளை காலையில்தான் உயரதிகாரி வருவார் என்பதால் காவல் நிலையத்தில் காத்திருக்குமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
போலீசாரின் நடவடிக்கை ஆட்டோ ஓட்டுநருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உடனே அந்த பெண்ணிடம் இவர்களும் மெய்தி சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறி, உங்கள் மக்களிடமே விட்டுவிடுகிறேன் என்று தெரிவித்து உள்ளார். அந்த பெண்ணும் சம்மதம் தெரிவிக்க பல கிலோ மீட்டர் தூரம் யார் கண்ணிலும் படாமல் குக்கி பழங்குடியின மக்களிடம் அந்த பெண்ணை விட்டு உள்ளார். இதனை அந்த பெண் தனியார் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் நெகிழ்ச்சியோடு தெரிவித்து இருக்கிறார்.
-
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு












Click it and Unblock the Notifications