பத்ரிநாத்தில் திடீர் பனிச்சரிவு.. பனிக்கட்டிக்குள் மூழ்கிய 57 பணியாளர்கள்.. இமயமலையில் என்ன நடந்தது?
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் உள்ள பத்ரிநாத் அருகே இன்று திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட 57 பணியாளர்கள் சரிந்த பனிக்கட்டிக்கு அடியில் சிக்கினர். இவர்களை மீட்கும் பணி என்பது தொடங்கி நடந்து வருகிறது.
இமயமலை அடிவாரத்தில் உத்தரகாண்ட் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக பத்ரிநாத், கேதார்நாத் உள்ளது. இமயமலையின் மீது பத்ரிநாத், கேதார்நாத் கோவில்கள் உள்ளன.

இந்த பத்ரிநாத், கேதார்நாத் பனி பிரதேசமாக உள்ளது. இதனால் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த மாதங்களில் நம் நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் புனித யாத்திரை செல்வார்கள். மற்ற மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி என்பது கிடையாது. இந்நிலையில் தான் உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் அருகே தேசிய
நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக ரோடு அமைக்கும் பணி என்பது நடந்து வருகிறது.
இந்த பணியில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் பணி என்பது நடந்து கொண்டிருந்தது. மானா - காஸ்டோலி பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது. அப்போது திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் பணியில் ஈடுபட்ட 57 பணியாளர்கள் சரிந்து விழுந்த பனிக்கட்டிக்கு நடுவே சிக்கினர். அவர்களை பனிக்கட்டிகள் மூடியது.

இதுபற்றி அறிந்தவுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் எல்லை சாலை அமைக்கும் அமைப்பை சேர்ந்த குழுவினர் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியை தொடங்கினர். முதற்கட்டமாக 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 41 பேர் பனிக்குள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பத்ரிநாத்தில் தற்போது பனிப்பொழிவு என்பது அதிகமாக உள்ளது. அதேபோல் பனிக்கட்டிகள் உருகி ஆறுகளில் வழிந்தோடுகின்றன. கடந்த 48 மணிநேரத்தில் பத்ரிநாத்தில் பனிப்பொழிவின் நிலைமை மோசமாகி உள்ளது. இதனால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளது. இதனால் ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்களை வெளியேறும்படி அரசு தரப்பில் கோரிக்கை என்பது வைக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் இன்று திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவால் 57 பணியாளர்கள் சிக்கி உள்ளனர்.
உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவின் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில இடங்களுக்கும் பனிச்சரிவு அபாயம் குறித்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதோடு பனிச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் வெளியேறவும், அந்த இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications