எப்படி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு போகலாம்? அகில இந்திய இமாம் கூட்டமைப்பு தலைவருக்கு மிரட்டல்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அகில இந்திய இமாம் கூட்டமைப்பு தலைவரான இமாம் உமர் அகமது இலியாசிக்கு போனில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்று கோவில் கருவறையில் நிறுவப்பட்ட 5 வயது பால ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார்.

இதையடுத்து 23ம் தேதி முதல் அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் லட்சக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று கோவிலில் தரிசனம் செய்து வருவதாக கூறப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் அனைத்திந்திய இமாம் அமைப்புகளின் தலைவரான இமாம் உமர் அகமத் இல்யாசி பங்கேற்றார். இந்நிலையில் தான் இமாம் உமர் அகமது இல்யாசிக்கு போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றதால் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது அகில இந்திய இமாம் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உமர் அகமது இல்யாசி டெல்லி போலீஸ் கமிஷனர், உள்துறை செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்றது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு Fatwa அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முப்தி கிளாசஸ் என்ற இன்ஸ்ட்டியூட் நடத்தி வரும் முக்பதி சபீர் உசைனியிடம் இருந்து இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் அகில இந்திய இமாம் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பில் உள்ளவருக்கு இப்படி Fatwa அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது இதுதான் முதல் முறையாகும். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications