Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெய் சிலிர்க்கும் சாதனை! 750 அரசு பள்ளி மாணவிகள் உருவாக்கிய "சாட்டிலைட்"! விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரசுப் பள்ளி மாணவிகள் சார்பில் தயாரிக்கப்பட்ட சிறிய வகை செயற்கைக்கோள் வரும் 7ம் தேதி காலை விண்ணில் ஏவப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து SSLV ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் காலை 9.30 மணியளவில் விண்ணில் ஏவப்படுகிறது.

'ஆசாதி சாட்' எனப்படும் இந்த செயற்கைக்கோள் வடிவமைப்பு திட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் பங்கேற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஆசாதிசாட்'

'ஆசாதிசாட்'

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள 75 அரசு பள்ளிகளிலிருந்து சுமார் 750 மாணவிகள் இந்த திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள் 'ஆசாதி சாட்' எனும் சிறிய செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்குவார்கள். இது சுதந்திர தினத்தையொட்டி விண்ணில் ஏவப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி சம்பந்தமான அறிவை வளர்ப்பதற்கு இந்த திட்டம் பெரிதளவில் பயன்படுத்தப்படும்.

இஸ்ரோ

இஸ்ரோ

தற்போது தயாரித்து முடிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 7ம் தேதி காலை 9.30 மணியளவில் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோளை தயாரிக்கும் பணி கடந்த பிப்ரவரியிலிருந்து தொடங்கப்பட்டது. வானிலை, இதர புற சூழல் என எல்லாம் சாதகமாக அமைந்தால், சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து காலை 9:18 மணிக்கு ஏவப்படும் செயற்கைக்கோள் 13.3 நிமிடங்களுக்குப் பிறகு, பூமியிலிருந்து சுமார் 356 கிமீ உயரத்தில் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் போராட்டம்

பெண்களின் போராட்டம்

இந்த திட்டம் குறித்து ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் (SKI) நிறுவனர்-தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீமதி கேசன் கூறுகையில், "பெண்கள் வெளியில் வருவதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த செயற்கைக்கோளை தயாரித்த இவர்கள் அதை விண்ணில் ஏவுவதை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதாவது அவர்களுக்கான அனுமதியை பெற்றோர்கள் வழங்கவில்லை. இதிலிருந்து இவர்கள் எத்தகைய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்பதை புரிந்துகொள்ளலாம். முதன் முறையாக அவர்கள் தயாரித்த செயற்கைக்கோள் ஒன்று விண்வெளிக்கு சென்று தகவல்களை திரட்ட போகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

சோதனைகள்

சோதனைகள்

சென்னையை தளமாக கொண்ட ஆய்வு அமைப்பு ஒன்று 'நிதி ஆயோக்குடன்' இணைந்து AzaadoSAT செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகளுக்கு தலைமையேற்று செயல்பட்டது. இந்த அமைப்பு மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய அளவில் அடிப்படை கருவிகளை வடிவமைத்து சோதனை செய்து காட்டியது. இதன் தொடர்ச்சியாக, உள் கணினி, விமான மென்பொருள், மின் சக்தி அமைப்பு, டெலிமெட்ரி மற்றும் டெலி-கமாண்ட் உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் உருவாக்கப்பட்டு சோதிக்கப்பட்டன.

தேசிய கீதம்

தேசிய கீதம்

இவ்வாறு விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோளில் தேசிய கீதம் மற்றும் பிரத்யேக விண்வெளி பாடல் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் விண்வெளிக்கு சென்றவுடன் இந்த பாடல்களை இசைக்கத்தொடங்கும். ஆனால் இதில் நிறைய சவால்கள் உள்ளன. பூமியில் காற்று உள்ளதால் அது ஒலியை கடத்தும். ஆனால் விண்வெளியில் காற்று கிடையாது. எனவே இங்கு ஒலிக்கும் பாடல்களை கேட்க முடியாது. இதற்கு பல அறிவியலாளர்கள் சிந்தித்து ஒரு யுக்தியை கண்டு பிடித்தனர். அதாவது பாடல்களை விண்வெளியில் ஒலிக்க விடாமல் விண்கலத்திற்குள் ஒலிக்க வைப்பதன் மூலம் அதை ரெகார்ட் செய்ய முடியும்.

Recommended Video

    Scientist APJ AbdulKalam என்ன கண்டுபுடிச்சாரு? | Public Opinion
    LoRA டிராண்ஸ்பான்டர்

    LoRA டிராண்ஸ்பான்டர்

    இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் விண்வெளி அடிப்படையிலான LoRA நுழைவாயிலை உருவாக்குவதற்கான LoRA டிரான்ஸ்பாண்டரை கண்டுபிடிப்பதேயாகும். அதாவது தற்போது பயன்பாட்டில் இருக்கும் LoRA எனப்படும் நீண்ட தூர ரேடியோ தொலைத்தொடர்பு கருவி புவியை தளமாக கொண்டுதான் இயங்கி வருகிறது. இதுவே விண்வெளியை தளமாக கொண்டு இயங்கினால் உலகம் முழுவதும் உள்ள தகவல்களை கம்பி சேவை இல்லாமலேயே பெற முடியும். இவற்றை கப்பல்கள், சுனாமியை உணர பயன்படுத்தப்படும் மிதவைகள் உள்ளிட்டவற்றில் இணைத்தால் இது தொடர்பான பேரிடர் தகவல்களை உடனடியாக நாம் தெரிந்துகொள்ள முடியும்.

    அதேபோல சூரிய கதிர்வீச்சின் தாக்கத்தையும் இது ஆய்வு செய்யும். இந்த செயற்கைக்கோளை சுமந்து செல்லும் SSLV ஏவுகணை 10-500 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+