ஹைதராபாத் பல்கலை தலித் மாணவர் தற்கொலை: மத்திய பாஜக அமைச்சர் தத்தாத்ரேயா மீது வழக்கு!
ஹைதராபாத்: ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்திலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட தலித் மாணவர் ரோகித் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஹைதராபாத் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது மாணவரை தற்கொலைக்குத் தூண்டியதாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட வெர்முலா ரோகித், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை நிறைவு செய்த ஆய்வு மாணவராவார். இந்த பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் வட்டத்தில் ரோகித் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் சக மாணவர்களுடன் சேர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதற்கு எதிராக போராடினார்.

இந்த போராட்டத்தின் போது, மத்தியில் ஆளும் பா.ஜ.கவுடன் தொடர்புடைய அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற அமைப்பினர் பல்கலைக்கழக மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்கள் தங்களை தாக்கியதாக அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் அந்த மாணவர்கள் மீது முதற்கட்ட விசாரணையை தொடங்க அனுமதியளித்தது. ஆனால் மத்திய அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பல்கலைக்கழகம் தனது முடிவை திரும்ப பெற்றுக் கொண்டது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட ரோகித் உள்ளிட்ட 5 மாணவர்களை பழி வாங்கும் கடந்த டிசம்பர் 21ம் தேதி விடுதி, உணவகம், நூலகம் என்று மாணவர்கள் பயன்படுத்தும் பொதுவெளிகள் எதையும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடந்த ஒரு வாரகாலமாக பல்கலைகழக வளாகத்திற்கு வெளியே கூடாரம் அமைத்து போராடி வந்தனர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் சமூக புறக்கணிப்பாலும், தொடர் நெருக்கடிகளாலும் மனமுடைந்த ரோகித் தலித் பேராசிரியர்கள் கூட நமக்கு ஆதரவாக இல்லையே என்று தன் நண்பர்களிடம் தனது ஆதங்கத்தை கூறி கதறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் விடுதி அறைக்குள் நுழைந்த அவர் தூக்கு மாட்டிக் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து ரோகித்தின் உடலை வைத்து மாணவர்கள் நேற்றிரவு முழுவதும் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலையில் பல்கலைக்கழகத்திற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 8 மாணவர்களைக் கைது செய்து ரோகித்தின் உடலைக் கைப்பற்றினர். பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், பலியான வெர்முலா ரோகித்தை தற்கொலைக்கு தூண்டியதாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஹைதராபாத் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications