ரொம்ப வீக்கா இருக்கியே.. பி-காம்பிளக்ஸ் மாத்திரை டியூப்பை கழட்டி.. சயனைடு நிரப்பி தந்து கொன்ற கணவன்!
மனைவிக்கு சயனைடு தந்து கொலை செய்துள்ளார் கணவன்
சித்தூர்: "நீ ரொம்ப வீக்-ஆ இருக்கியே.. விட்டமின் மாத்திரை வாங்கி தரேன்" என்று சொல்லி ஆன்லைனில் சயனைடு வரவழைத்தார் கணவர்.. அதை பி - காம்பிளக்ஸ் என்று சொல்லி மனைவிக்கு கொடுத்து.. ஆளையே கொன்றுவிட்டார்!
திருப்பதியைச் சேர்ந்தவர் ரவி சைதன்யா.. 32 வயது.. மதனபல்லியில் உள்ள தனியார் பேங்கில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ஆமினி.. 27 வயதாகிறது.. கடந்த 2015ல் இவர்களுக்கு கல்யாணம் ஆனது.. ஆனால் குழந்தைகள் இல்லை.. கல்யாணத்துக்கு ஆமினி பெற்றோர் 15 லட்சம் ரூபாய், ஒரு ஏக்கர் நிலம் உட்பட எல்லா சீர்வரிசையும் வரதட்சணையாக தந்தனர்.
இந்நிலையில் 2 வருஷத்துக்கு முன்பு ஆமினியின் தங்கைக்கு கல்யாணம் நடந்தது.. அப்போது புது மாப்பிள்ளைக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் தந்தார்கள்.. இது ரவி சைதன்யாவுக்கு அதிர்ச்சியை தந்தது.. இதையே சொல்லி சொல்லி ஆமினியிடம் தகராறு செய்துள்ளார். இன்னும் ஒரு ஏக்கர் நிலம் வந்தாக வேண்டும் என்று கொடுமைப்படுத்தி உள்ளார். ஆமினியை பார்க்கும்போதெல்லாம் அவரது உடம்பில் ஏதாவது காயம் இருக்குமாம்.
போன 27ம் தேதிகூட பாத்ரூமில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி ஆமினியை மதனபல்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.. அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆமினி ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.. இதனால் ஆமினியின் பெற்றோர் பதறிபோய், போலீசுக்கு ஓடினார்கள்.. தங்கள் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொல்லவும்தான், அவர்கள் விரைந்து வந்து ஆமினி உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினர்.
மற்றொரு புறம் போலீசார் இது சம்பந்தமான விசாரணையிலும் இறங்கினர். அப்போதுதான் வரதட்சணை சமாச்சாரம் வெளியே வந்தது. அதற்குள் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்டும் வந்தது.. அதில், ஆமினி சயனைடு சாப்பிட்டு இறந்தது தெரியவந்தது. இப்போது போலீசாரின் விசாரணை இன்னும் தீவிரமானது. ரவியை பிடித்து சரமாரியாக விசாரித்தனர்.. இதையடுத்து மனைவியை கொன்றதை ஒப்புக் கொண்டார்.
வரதட்சணை கிடைக்காததால் இந்த கொலை நடந்துள்ளது.. உடம்பு ரொம்ப வீக்காக இருப்பதாக சொல்லி சத்து மாத்திரை வாங்கி தருகிறேன் என்று பாசமாக சொல்லி உள்ளார். பிறகு.. ஆன்லைனில் சயனைடு ஆர்டர் செய்து வாங்கி உள்ளார்.. விட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரையில் உள்ள டியூப்பை கழட்டி.. அதிலிருந்த மருந்துகளை கீழே கொட்டிவிட்டு, அதில் சயனைடு பவுடரை நிரப்பினார் ரவி.
இதை ஆமினிக்கு தர, அவரும் எதுவுமே தெரியாமல் வாங்கி சாப்பிட்டு விட்டார். கொஞ்ச நேரத்திலேயே ஆமினி மயங்கி விழவும், பாத்ரூமில் விழுந்து விட்டதாக சொல்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளார். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, இப்போது ரவி சைதன்யா கைது செய்யப்பட்டுள்ளார்.. இதுபோக ஆன்லைனில் இவர் சயனைடு எப்படி வாங்கினார் என்ற விசாரணையும் நடந்து வருகிறது.
-
தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications