புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு கொண்டு சேர்க்கவே நாளை விடுமுறை: சக்திகாந்த தாஸ் விளக்கம்
புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு எடுத்துச் செல்வதற்காக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என சக்திகாந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு கொண்டு சேர்க்கவே நாடு முழுவதும் வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சக்திகாந்த தாஸ் கூறுகையில், நவம்பர் 10-ந் தேதி முதல் நாடு முழுவதும் புதிய ரூ 500, ரூ 2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் நாட்டின் உண்மையான வளர்ச்சி ஏற்படும். மத்திய அரசின் புதிய நடவடிக்கைக்கு ரிசர்வ் பேங்க் ஒப்புதல் அளித்துள்ளது. உயர் மதிப்பிலான பண பரிவர்த்தனைகளை ரொக்கமாக செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளடைவில் இந்த நடவடிக்கை நாட்டு நலனுக்கு உதவும் எனக் கூறினார். கூடுதல் பாதுகாப்புடன் மற்ற நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும், ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்வதற்காக கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், கள்ள நோட்டு, கருப்பு பண புழக்கத்தை தடுக்கவே 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு மத்திய அரசு வட்டாரத்தில் சிலருக்கு மட்டுமே தெரியும். போதிய அளவில் மாற்று நோட்டுக்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகளுக்கு கொண்டு செல்வதற்காகவே நாளை நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், வங்கிகள், கருவூலங்களும் நாளை மூடப்படும் எனவும் அனைத்து வங்கிகளும் 24 மணிநேரமும் சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றார். இதனிடையே பொதுமக்கள் சந்தேகங்களை தீர்க்க 011 - 23093230 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications