எப்படி ஹெல்மெட் போடாமல் "காரில்" போகலாம்... பாஜக பிரமுகருக்கு ஃபைன் போட்ட பெங்களூரு போலீஸ்!
பெங்களூரு: காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி பாஜக பிரமுகர் ஒருவருக்கு பெங்களூரு போலீசார் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மல்லேசுவரத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பிரகாஷ். நேற்று முன் தினம் இவருக்கு போக்குவரத்து போலீசாரிடம் இருந்து அபராத ரசீது ஒன்று வந்தது.
அதில், அவருடைய காரின் பதிவு எண் குறிப்பிடப்பட்டு இருந்தது. கூடவே, கடந்த 4ம் தேதி பசவேசுரா சர்க்கிளில் இந்த வாகனம் சென்ற போது, அதன் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தவர் ஹெல்மெட் அணியவில்லை என்றும், அதனால் ரூ. 100க்கு இந்த அபராத ரசீது அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்டு பிரகாஷ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக மாநகர போக்குவரத்து போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தங்களது தவறை போக்குவரத்து அதிகாரிகள் உணர்ந்தனர். இது குறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த தவறு எந்திர கோளாறு காரணமாக நடந்துள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது' என்றார்.
இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications