பீகார் ஆளுநரை சந்தித்தார் மஞ்சி! சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை!!
பாட்னா: பீகார் முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்து வரும் ஜிதன்ராம் மஞ்சி இன்று ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்தார். அப்போது சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் தமக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிப்பேன் என்றும் ஆளுநரிடம் மஞ்சி கோரிக்கையும் விடுத்துள்ளார்.
பீகார் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் தேர்தல் பிரசாரம் நிதிஷ்குமார் தலைமையில் நடந்தால்தான் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று கட்சிக்குள் கருத்து வலுவடைந்துள்ளது.

70 வயதான மஞ்சியோ முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்துவிட்டார். அத்துடன் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சட்டசபையைக் கலைக்கவும் முதல்வர் மஞ்சி பரிந்துரை செய்தார்.
ஆனால் ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் நிதிஷ்குமாரை சட்டசபை தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதனிடையே அதிரடியாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து இன்று மஞ்சி நீக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நிதிஷ்குமாரும் ஆளுநர் கேசரிநாத்தை 130 எம்.எல்.ஏக்களுடன் நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரைத் தொடர்ந்து ஆளுநர் கேசரிநாத்தை மஞ்சியும் சந்தித்தார்.
இதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஞ்சி, நிதிஷ்குமாரை சட்டசபை தலைவராக ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்தது அரசியல் சாசன விரோதமாகும்.
நான் தற்போதும் சட்டசபையில் ஐக்கிய ஜனதா தலம் தலைவர்தான். சட்டசபையில் தேவைப்பட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிப்பேன். அதனால்தான் ஆளுநரிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications