லாலுவின் மூத்தமகன் வெற்றி... 2வது மகன் தொடர்ந்து முன்னிலை!
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் லாலு பிரசாத் யாதவின் இரண்டு மகன்களில் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார், மற்றொருவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
பீகாரில் 5 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைத்தன.
இதில், வைஷாலி மாவட்டத்தின் 2 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் போட்டியிட்டனர்.

லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ், வைஷாலி மாவட்டத்தின் ரஹ்கோபூர் தொகுதியில் போட்டியிட்டார். இத்தொகுதியில் 1995,2000ஆம் ஆண்டுகளில் லாலுவும், 2005 பிப்ரவரி, 2005 அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் ராப்ரி தேவியும் வெற்றி பெற்றிருந்தனர். இது லாலுவின் குடும்ப தொகுதியாக கருதப்படுகிறது.
இதேபோல், லாலுவின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ், வைஷாலி மாவட்டத்தின் மகுவா தொகுதியில் போட்டியிட்டார்.
இந்நிலையில், இன்று பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, தேஜ்பிரதாப் மற்றும் தேஜஸ்வி இருவரும் ஆரம்பத்தில் சற்று பின்தங்கிய நிலையில் காணப்பட்டனர். பின்னர் அதிரடியாக முன்னணிக்கு வந்தனர்.
தற்போது லாலுவின் மூத்த மகனான தேஜ்பிரதாப் யாதவ் தனது தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளைய மகன் தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
தன்னைத் தொடர்ந்து மனைவியை அரசியலில் இறக்கி முதல்வர் பதவியிலும் அமர வைத்த லாலு, இந்தத் தேர்தலில் தனது இரு மகன்களையும் களத்தில் இறக்கினார். இருவருக்கும் இதுதான் முதல் தேர்தலாகும். முதல் தேர்தலிலேயே வெற்றிக் கனியைப் பறித்து அப்பாவின் நம்பிக்கையை இருவரும் காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாலு குடும்பத்தில் ஏற்கனவே அவரது மகள் மிசா பார்தி கடந்த லோக்சபா தேர்தலின்போது போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து மகன்களை இந்தத் தேர்தல் மூலம் லாலு அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications