அதி தீவிரத்திலிருந்து.. மிக தீவிர புயலாக வலுவிழந்தது 'பைபர்ஜாய்'! உஷார் நிலையில் குஜராத்
காந்திநகர்: அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த பைபர்ஜாய் புயல், மிக தீவிர புயலாக வலுவிழந்தது. இது வரும் 14ம் தேதி காலை வரை வடக்கில் நகர்ந்து 15ம் தேதியன்று குஜராத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த 5ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவானது. இது மெல்ல வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. மேலும் வலுப்பெற்று புயலாக மாறிய நிலையில் இதற்கு 'பைபர்ஜாய்' என பெயரிடப்பட்டது. இந்த பிபர்ஜாய் புயலானது தீவிர புயலாகவும், அதிதீவிர புயலாகவும் மாறியது.

இது முழுக்க முழுக்க வடகிழக்கு திசையில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்தது. அதாவது, கொங்கன் - கோவா - மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளின் ஓரமாக ஒட்டி குஜராத் நோக்கி முன்னேறியது. இதன் காரணமாக கடந்த சில ஓரிரு நாட்களில், இப்பகுதிகளில் 135 முதல் 145 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. மேலும் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்தது. பொதுவாக ஒரு புயல் உருவானால் அது, தன்னை சுற்றியுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சு எடுத்துக்கொள்ளும்.
தற்போதும் இந்த பைபர்ஜாய் புயல் இதைத்தான் செய்திருக்கிறது. எனவே இதன் காரணமாக தென்மேற்கு பருவ மழையானது தள்ளி போயுள்ளது. ஏற்கெனவே கேரளாவில் பருவமழை தாமதமாக தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், புயல் இம்மழையை மேலும் தாமதமாக்கியுள்ளது.
இந்நிலையில் இந்த புயல், நாளை காலை வடக்குப்பகுதியை நோக்கி நகர்ந்து, அதன்பிறகு வடக்கு - வடகிழக்குப்பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாளான ஜூன் 15ம் தேதி நண்பகலில் மாண்ட்வி (குஜராத்)- கராச்சி (பாகிஸ்தான்) இடையே ஜக்காவ் துறைமுகம் (குஜராத்) அருகே பாகிஸ்தான் கடலோரப் பகுதியையொட்டி சௌராஷ்டிரா, கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்றும், கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 21 ஆயிரம் படகுகள் இதுவரை நிறுத்தப்பட்டுள்ளன. மாநிலப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 10 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 12 குழுக்கள் மற்றும் மூன்று கூடுதல் குழுக்கள் ஏற்கனவே குஜராத்தில் தயார் நிலையில் உள்ளன. அரக்கோணம் (தமிழ்நாடு), முண்ட்லி (ஒடிசா), பதின்டா (பஞ்சாப்) ஆகிய பகுதிகளில் தலா ஐந்து குழுக்கள் என 15 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் இந்த புயல், அதி தீவிர நிலையிலிருந்து மிக தீவிர புயலாக வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications