''அரசு மருத்துவமனையில் பிறந்தநாள் பார்டி''.. உ.பி.யில் இளைஞர்கள் அட்டூழியம்.. தீயாய் பரவும் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

போபால்: உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் பிறந்த நாள் பார்ட்டி என்ற பெயரில் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியையும் அழகான நினைவுகளையும் தருவதால், ஒவ்வொருவரும் பிறந்த நாளை பல்வேறு ஆனந்தத்துடன் தங்களுக்கு பிடித்த இடங்களில் கொண்டாடி வருகின்றனர். இதில் எந்த தவறும் இல்லை.

ஆனால், சமீப காலமாக பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக பிறந்த நாளை கொண்டாடும் போக்கு அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக 2 கே பசங்களின் இந்த சேட்டைகளை சமூக வலைத்தளங்களின் அதிகம் காணமுடிகிறது.

 சமூக ஆர்வலர்களின் கவலை

சமூக ஆர்வலர்களின் கவலை

கல்லூரிக்கு செல்லும் போது ரயில்களில் கும்பலாக பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பிற பயணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவது, கத்திக் கூச்சல் போட்டு பயமுறுத்துவது, ஆயுதங்களை காட்டி அலப்பறை செய்வது என இவர்களின் சேட்டைகளை சொல்லி மாளாது. அதேபோல் மாநகர பேருந்துகளிலும் அடிக்கடி கல்லூரி மாணவர்கள் அடிக்கடி இப்படி சேட்டைகளில் ஈடுபடுவது நாம் பரவலாக காண முடிகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் இது சற்று அதிகாமகவே நடப்பதாக சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.

 மருத்துவமனையில் பிறந்தநாள் பார்டி

மருத்துவமனையில் பிறந்தநாள் பார்டி

இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் மருத்துவமனையில் பிறந்த நாள் கொண்டாடி அலப்பறை செய்துள்ளனர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த புள்ளிங்கோக்கள். சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் கேக் வெட்டும் இளைஞர்கள் சிலர் தொடர்ந்து கத்தில் கூச்சல் போடுகின்றனர். தொடர்ந்து பெல்ட்டால் அடித்துக்கொண்டு ஜாலியாக விளையாடுகின்றனர்.

 ஒரு மணி நேரம் நீடித்த கொண்டாட்டம்

ஒரு மணி நேரம் நீடித்த கொண்டாட்டம்

இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மருத்துவர்கள் சிலரும் அங்கு நின்று ரசிப்பது போல் தெரிகிறது. சிலர் முகத்தில் கேக்குகளையும் பூசிக்கொண்டு அங்கும் இங்கும் ஜாலியாக ஓடுகின்றனர். சுமார் ஒரு அணி நேரம் நீடித்த இந்த கொண்டாட்டம் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளுக்கு கடும் அசவுகரியத்தை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் தீயாக பரவிய இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள உத்தர பிரதேச சுகாதாரத்துறை, பிறந்த நாள் பார்ட்டியில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் எப்படி அவர்கள் பிறந்த நாள் கொண்டாடினர்? அவர்களுக்கு டாக்டர்கள் யாரும் பிற்ந்த நாள் கொண்டாட அனுமதித்தனரா? என்பது குறித்து விசாரிக்க மருத்துவமனையிடம் அறிக்கை கோரியிருப்பதாகவும் உரிய விளக்கம் கிடைத்ததும் மருத்துவர்கள் யாருக்கும் தொடர்பு இருந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கபப்டும் என்று உத்தர பிரதேச துணை முதல்வர் தெரிவித்தார்.

 இளைஞர்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும்

இளைஞர்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும்

எனினும் இது தொடர்பான வீடியோ தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால், அதற்கு பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு இடையூறாக இப்படி நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டாடுவது கடும் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு இத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+