கோவா பஞ்சாயத்து தேர்தலில் பாஜக அபார வெற்றி.. காங்கிரஸ் படுதோல்வி
கோவா: கோவா மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 49 இடங்களில் 32 இடங்களை வென்றது, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மிக மோசமாக தோற்றது. வெறும் நான்கு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.
மொத்தம் 50 இடங்களைக் கொண்ட மாநிலத்தின் ஜில்லா பஞ்சாயத்துகளில் 48 இடங்களுககு டிசம்பர் 12 அன்று வாக்களிப்பு நடந்தது. ஒரு தொகுதியில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றிருந்தாலும், மற்றொரு தொகுதியில் ஒரு வேட்பாளரின் மரணம் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

திங்கள்கிழமை அறிவிக்கப்பட் முடிவுகளின் படி, பாஜக 32 இடங்களையும், சுயேச்சைகள் ஏழு இடங்களையும், காங்கிரஸ் நான்கு, எம்ஜிபி மூன்று இடங்களையும், என்சிபி மற்றும் ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) தலா ஒரு இடங்களையும் வென்றன.
2022 சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைத் தொகுதிகளில் போட்டியிட இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த சூழலில் ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் ஆம் ஆத்மி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
32 இடங்களில் வென்றுள்ளதால் உற்சாகம் அடைந்துள்ள முதல்வர் பிரமோத் சாவந்த், பாரதீய ஜனதா மற்றும் என் தலைமையின் கீழ் பணிபுரியும் கோவா அரசு மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக கோவா மக்கள் முன் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன். அதே நம்பிக்கையையும், முன்னேற்றத்தையும் முன்னெடுத்துச் செல்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications