கொரோனா வந்தால்...மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என்று கூறிய...பாஜக தலைவருக்கு கொரோனா!!
கொல்கத்தா: தனக்கு கொரோனா வந்தால் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டி பிடிப்பேன் என்று கூறி இருந்த பாஜக தேசிய செயலாளராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் அனுபம் ஹஸ்ராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கும் அனுபம், ''எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இவர் தற்போது கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவருக்கு மூச்சு திணறல் வந்ததையடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப் பிடிப்பேன் என்று கூறிய இவர்மீது மேற்குவங்க போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
2019ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்து இருக்கும் அனுபம் கடந்த ஞாயிற்றுக் கிழமை போல்பூரில் பேசுகையில், ''எனக்கு என்றாவது ஒரு நாள் கொரோனா தொற்று ஏற்பட்டால், மம்தா பானர்ஜியை கட்டிப் பிடிப்பேன். அப்போதுதான் கொரோனாவில் தனது சொந்த பந்தங்களை இழந்தவர்களின் வலி அவருக்குத் தெரியும்'' என்று தெரிவித்து இருந்தார்.
தேசிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருந்த மறுநாளே அனுபம் இவ்வாறு கூறி இருந்தார். இதற்கு பெரிய அளவில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இதற்கு பாஜக துணைத் தலைவர் முகுல் ராய் அளித்திருந்த பதிலில், ''பேசுவதற்கு முன்பு என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும்'' என்று எச்சரித்து இருந்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications