ம.பி.யில் 'ஹாட்ரிக்' வெற்றி- ராஜஸ்தானில் காங்.ஐ குப்புற வீழ்த்தி ஆட்சியை பிடித்த பாஜக!!
ஜெய்ப்பூர்/போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியை படுதோல்வி அடையச் செய்து மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
ஹாட்ரிக் மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பாஜக கூடுதல் இடங்களில் முன்னிலை வகித்தது. அம்மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.

மாலை 5 மணி நிலவரப்படி 128 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாரதிய ஜனதா கட்சி 99 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸோ 29 இடங்களைத்தான் கைப்பற்றியிருந்தது.
மேலும் 63 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்தது. காங்கிரஸ் 32 இடங்களில் முன்னிலை வகித்தது.
ராஜஸ்தானில் மீண்டும் பாஜக
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி மிகப் பெரும் பின்னடைவை எதிர்கொண்டிருக்கிறது.

மாலை 5 மணி நிலவரப்படி 180 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாரதிய ஜனதா கட்சி 147 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றியைப் பெற்றது. ஆளும் காங்கிரஸோ வெறும் 23 தொகுதிகளைத்தான் கைப்பற்றியது.
எஞ்சிய 19 தொகுதிகளில் பாஜக 12 தொகுதிகளிலும் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications